Old TV to Smart TV : வீட்டில் கிடக்கும் பழைய டிவி ஸ்மார்ட் டிவியாக மாறும் - வெறும் 2000 ரூபாய் போதும்!
உங்கள் வீட்டில் பழைய டிவி இருந்து, அதில் அதில் ஸ்மார்ட் டிவியின் சிறப்பம்சங்கள் இல்லை என்றால் அந்த டிவியை வெறும் 2000 ரூபாய்க்கும் குறைவான பணத்தில் ஸ்மார்ட் டிவியாக மாற்றலாம்.
முன்பெல்லாம் பிடித்த படங்களை தொலைக்காட்சியில் பார்க்க ஏதாவதொரு பண்டிகையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்க வேண்டும். அப்படி படம் பார்க்க வேண்டும் என்றாலும் டிடிஹெச் அல்லது கேபிள் இணைப்பு அவசியம். இப்போது, அந்த காலமெல்லாம் இப்போது மலையேறிவிட்டது. உங்களுக்கு பிடித்த படங்கள் அல்லது வெப்சீரிஸ்களை நெட்பிளிக்ஸ், அமேசான், டிஸ்னி ஹாட்ஸ்டார் போன்ற ஆன்லைன் ஓடிடி ஸ்டீரிமிங் செயலிகள் மூலம் உடனடியாக பார்த்து ரசிக்கலாம். அதற்கு ஸ்மார்ட் டிவி மற்றும் ஆன்லைன் இணைய வசதி மட்டும் இருந்தால்போதும்., அதாவது உங்கள் மொபைல் நெட்வொர்க்கே போதும்.
பெரும்பாலும் எல்லோரும் மொபைல் மற்றும் இணைய வசதியை வைத்திருக்கிறார்கள். ஆனால் ஸ்மார்ட் டிவி மட்டும் தான் அவர்களிடத்தில் இருபத்தில்லை. பழைய மாடல் டிவிக்களை வீட்டில் வைத்திருக்கிறார்கள். இப்போது அந்த பழைய மாடல் டிவிக்களையும் குறைந்த செலவில் ஸ்மார்ட் டிவிக்களாக மாற்றும் டெக்னாலஜி வந்துவிட்டது. அதுவும் 2 ஆயிரத்துக்கும் குறைவான விலையிலேயே நீங்கள் உங்கள் பழைய தொலைக்காட்சியை ஸ்மார்ட் டிவியாக மாற்றிக் கொள்ளலாம். பழைய டிவி அல்லது எந்த டிஸ்ப்ளேவையும் ஸ்மார்ட் டிவியாக மாற்றுவதற்கான விருப்பம் ஸ்ட்ரீமிங் ஸ்மார்ட் ஸ்டிக் உதவியுடன் கிடைக்கிறது.
மேலும் படிக்க | நவராத்திரிக்கு பம்பர் ஆப்பர்... 50 GB டேட்டாவை வாரி வழங்கும் வோடபோன்!
பழைய டிவியின் இன்சைட் போர்ட்டில் இந்த ஸ்டிக் செருகப்பட்டவுடன், அது ஸ்மார்ட் டிவிக்கான அத்தனை அம்சங்களைப் பெறும். மேலும் நீங்கள் உங்களுக்கு பிடித்த படங்கள் அல்லது வெப்சீரீஸ்களை நேரடியாக வைஃபை மூலம் ஸ்ட்ரீம் செய்யலாம். இப்போது, அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை நடந்து வருகிறது. இதில் மிகவும் பிரபலமான ஸ்ட்ரீமிங் சாதனமான Fire TV Stick-ஐ பாதி விலைக்கும் குறைவாக வாங்கலாம்.
உங்கள் பழைய டிவி ஸ்மார்ட்டாக மாறும்
ஃபயர் டிவி ஸ்டிக்கை பழைய டிவி அல்லது மானிட்டரின் HDMI போர்ட்டில் செருக வேண்டும். அதை ஆன் செய்தவுடன், ஸ்மார்ட் டிவி போல அமைக்கும் விருப்பத்தைப் பெறுவீர்கள். உங்கள் பழைய டிவியில் HDMI போர்ட் இல்லாவிட்டாலும், எந்த பிரச்சனையும் இல்லை. ஆன்லைனில் கிடைக்கும் கன்வெர்ட்டர்கள் மற்றும் கேபிள்களின் உதவியுடன் HDMI போர்ட்டை உங்கள் டிவியின் ஒரு பகுதியாக மாற்றலாம் மற்றும் உங்களுக்குப் பிடித்த ஸ்ட்ரீமிங் ஆப்ஸின் உள்ளடக்கத்தைப் பார்க்க ஸ்மார்ட் ஸ்டிக்கைச் செருகலாம்.
ஃபயர் டிவி ஸ்டிக் தள்ளுபடி
அமேசான் விற்பனையின் போது, ஃபயர் டிவி ஸ்டிக் லைட் வேரியண்ட் ரூ.3,999க்கு பதிலாக ரூ.1,799க்கு மட்டுமே கிடைக்கிறது. அலெக்சா வாய்ஸ் ரிமோட் லைட் இதனுடன் கிடைக்கிறது. இதன் மூலம், திரைப்படங்களை HD தரத்தில் ஸ்ட்ரீம் செய்யலாம். குறிப்பிட்ட OTT இயங்குதளங்களுக்கு ரிமோட்டில் பிரத்யேக பட்டன்களும் வழங்கப்படுகின்றன. இருப்பினும், இந்த ரிமோட்டில் டிவி கன்ட்ரோல்கள் வழங்கப்படவில்லை, மேலும் ஒலியளவை கட்டுப்படுத்த அல்லது பவர் ஆன் செய்ய டிவி ரிமோட்டின் உதவியை நீங்கள் எடுக்க வேண்டும்.
அதே நேரத்தில், டிவி கட்டுப்பாடுகள் மற்றும் ஒலியை அதிகரிக்க அல்லது குறைக்க விருப்பம் இருந்தால், நீங்கள் Fire TV Stick வேரியண்டை வாங்கலாம். இது ரூ.5,999க்கு பதிலாக ரூ.2,199க்கு விற்பனையில் கிடைக்கிறது. இதனுடன், Alexa வாய்ஸ் ரிமோட் கிடைக்கிறது. மேலும் HD தரத்தில் ஸ்ட்ரீமிங் செய்வதற்கான எளிதான விருப்பமும் கிடைக்கிறது என்பதால் நீங்கள் இனியும் காத்திருக்க வேண்டாம். உடனடியாக உங்கள் பழைய டிவியை ஸ்மார்ட் டிவியாக மாற்றுங்கள்.
மேலும் படிக்க| 12 ஜிபி ரேம்.. 32 எம்பி செல்ஃபி கேமரா 31,000 தள்ளுபடியில் ரியல்மி மொபைல்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ