நவராத்திரிக்கு பம்பர் ஆப்பர்... 50 GB டேட்டாவை வாரி வழங்கும் வோடபோன்!

Vodafone Idea Navaratiri Offer: நவராத்திரியை முன்னிட்டு வோடபோன் ஐடியா நிறுவனம் அதன் பயனர்களுக்கு பயனர்கள் 50ஜிபி வரை கூடுதல் டேட்டாவை வழங்குகிறது. 

Written by - Sudharsan G | Last Updated : Oct 19, 2023, 04:04 PM IST
  • இது மூன்று ரீசார்ஜ் திட்டங்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.
  • இதன் ஒரு திட்டத்தில் இலவச ஹாட்ஸ்டாரும் கிடைக்கிறது.
  • மேலும், இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஓராண்டாகும்.
நவராத்திரிக்கு பம்பர் ஆப்பர்... 50 GB டேட்டாவை வாரி வழங்கும் வோடபோன்!  title=

Vodafone Idea Navaratiri Offer: ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு போட்டியளிக்கும் வகையில் வோடபோன் ஐடியா (Vodafone Idea - Vi) பல அதிரடி ஆப்பர்களை வழங்குகின்றன. அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் சிறப்பு சலுகையை வழங்கியுள்ளது. பண்டிகை காலங்களில், வோடபோன் ஐடியா தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு நவராத்திரி சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. 

இந்த சலுகையின் கீழ், இந்த நிறுவனம் அதன் தற்போதைய திட்டங்களில் கூடுதல் டேட்டாவை வழங்குகிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்த திட்டங்களின் விலை ரூ.1,449, ரூ.2,899 மற்றும் ரூ.3099 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களில் பயனர்கள் 50ஜிபி வரை கூடுதல் டேட்டாவைப் பெறுகின்றனர். இதுகுறித்த முழுமையாக காணலாம்.

நவராத்திரி சலுகை

வோடபோன் ஐடியா நிறுவனம் நவராத்திரி (Vodafone Idea Navaratiri Offer) சலுகையை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த சலுகையின் கீழ், நிறுவனம் தனது 3 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களில் கூடுதல் டேட்டா வசதியை வழங்குகிறது. அதாவது முன்பே கூறியது போன்று இந்த திட்டங்களின் விலை ரூ.1449, ரூ.2899 மற்றும் ரூ.3099 என்பதை நினைவில் கொள்ளவும். இந்த சலுகையின் சிறப்பம்சங்களின் ஒன்று என்னவென்றால், இந்த திட்டங்களில்  1 வருடம் வேலிடிட்டியை கொண்டுள்ளது என்பதுதான். அதே நேரத்தில், அதில் ஒரு திட்டத்தில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி சந்தாவுடன் கிடைக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் படிக்க | 56GB டேட்டா... அன்லிமிடட் டேட்டா - ஜியோவின் பம்பர் ப்ரீபெய்ட் திட்டம்!

கூடுதல் நன்மை

வோடபோன் நிறுவனத்தின் இந்தத் திட்டங்கள் அனைத்தும் வரம்பற்ற டேட்டா மற்றும் வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர் பலன்களுடன் Binge All Night உள்ளிட்ட கூடுதல் பலன்களை வழங்குகின்றன. இரவு டேட்டா நன்மை நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை வரம்பற்ற டேட்டாவை வழங்குகிறது. இந்த டேட்டா பயனர்களின் தினசரி டேட்டா ஒதுக்கீட்டில் இருந்து கழிக்கப்படாது. கூடுதலாக, வார இறுதி டேட்டா பரிமாற்றத்தில், திங்கள் முதல் வெள்ளி வரை மீதமுள்ள டேட்டா சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பயன்படுத்தப்படலாம்.

அந்த மூன்று ரீசார்ஜ் பிளான்கள்

ரூ.3,099 ரீசார்ஜ் பிளான்

வோடபோன் ஐடியோ நிறுவனத்தின் ரூ.3,099 திட்டம் 365 நாட்கள் வரை வேலிடிட்டி உடன் வரும். இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு, தினசரி 2ஜிபி டேட்டா மற்றும் தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் நன்மைகள் ஆகியவை அடங்கும். இந்த நவராத்திரி சலுகையின் கீழ், நிறுவனம் இந்த திட்டத்தில் 50ஜிபி கூடுதல் டேட்டாவையும் வழங்குகிறது. இது தவிர, இந்த திட்டத்தில் உங்களுக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாவுடன் கிடைக்கும்.

ரூ.1,449 ரீசார்ஜ் பிளான்

வோடபோன் ரூ.1449 திட்டத்தில், பயனர்கள் 180 நாட்கள் வரை செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு வசதி, தினசரி 1.5 ஜிபி டேட்டா மற்றும் தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் ஆகியவை அடங்கும். நவராத்திரி சலுகையின் கீழ், நிறுவனம் இந்த திட்டத்தில் 30 ஜிபி கூடுதல் டேட்டாவை வழங்குகிறது.

ரூ.2,899 ரீசார்ஜ் பிளான்

வோடபோன் நிறுவனத்தின் ரூ.2889 திட்டம் 365 நாட்கள் வரை செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு வசதி, தினசரி 1.5 ஜிபி டேட்டா மற்றும் தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் ஆகியவை அடங்கும். நவராத்திரி சலுகையின் கீழ், நிறுவனம் இந்த திட்டத்தில் 50ஜிபி கூடுதல் டேட்டாவை வழங்குகிறது.

மேலும் படிக்க | ஜியோவின் திடீர் சர்ப்ரைஸ்... ஓடிடிகள் இலவசம், பம்பர் பலன்கள் - ஆண்டுக்கு இவ்வளவுதான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News