செய்திகளை கொடுப்பது, முதலில் செய்திகளை தருவது, பேரழிவு நிவாரணம் என சமூக நன்மைக்காகவே பொது ட்விட்டர் தரவுகளை (public Twitter data) பயன்படுத்துவதாக டிவிட்டர் சமூக ஊடக தளம் கூறியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ட்விட்டர் நடத்தும் Dataminr என்ற சேவையானது, மக்களிடையே பதற்றங்கள் நிலவும்போதோ அல்லது ஆர்ப்பாட்டங்கள் குறித்தோ காவல்துறை மற்றும் பிற அரசாங்க நிறுவனங்களுக்கு முன்னெச்சரிக்கை கொடுப்பதற்காக எச்சரிக்க பொது ட்விட்டர் தரவுகளை (public Twitter data) பயன்படுத்துகிறது.


Dataminr மூலம் டிவிட்டர் கண்காணிப்பு தடை விதிகளை ட்விட்டர் மீறியதாக பலர் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், Dataminr சேவையை கண்காணிப்புக்கு மட்டுமே பயன்படுத்துவதாகக் கூறி தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ட்விட்டர் மறுத்துவிட்டது.


"கண்காணிப்பு நோக்கங்களுக்காக எங்கள் டெவலப்பர் சேவைகளைப் பயன்படுத்துவதை ட்விட்டர் தடைசெய்கிறது" என்று ட்விட்டரின் செய்தித் தொடர்பாளர், ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.


செய்திகளை கொடுப்பது, முதலில் செய்திகளை தருவது, பேரழிவு நிவாரணம் என சமூக நன்மைக்காகவே பொது ட்விட்டர் தரவுகளை (public Twitter data) பயன்படுத்துவதாக டிவிட்டர் சமூக ஊடக தளம் கூறியது


இந்த கண்காணிப்பு சேவையானது, போராட்டத்திற்கு  வழிவகுக்கும் பிளாக் லைவ்ஸ் மேட்டர் போன்ற எந்தவொரு சிவல் இயக்கங்களுடனும் தொடர்புடைய ட்வீட்களை கண்காணிக்கப் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பிட்ட முக்கியமான வார்த்தைகளைத் தேடும் செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) தொழில்நுட்பம் மூலம் Dataminr கண்காணிக்கிறது.  


இந்த சேவையானது "முக்கியமான நிகழ்வுகள் நடப்பதைப் பற்றி பயனர்களுக்குத் தெரிவிக்கிறது. நேரம் வீணாவதைக் குறைத்து விரைவாகவும் நம்பிக்கையுடனும் செயல்பட உதவுகிறது" என்று டிவிட்டர் நிறுவனம் கூறுகிறது.  


FIrst Alert என்பது பொது களத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட ட்வீட்களை அடிப்படையாகக் கொண்டதாகும். கண்காணிப்பு தொடர்பான ட்விட்டர் நிறுவனத்தின் கொள்கையை முறையாக பின்பற்றும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது என்று டிவிட்டர் கூறுகிறது.  


இதையும் படிக்கலாமே | வெட்கப்படுகிறோம், வேதனைப்படுகிறோம்: மன்னிப்பு கேட்ட Twitter..!!!


பள்ளிகள் போன்ற முக்கியமான பகுதிகளுக்கு அருகில் தாக்குதல்கள் நடைபெறாமல் தடுக்க இந்த சேவை உதவுகிறது.


அமெரிக்க நாளிதழான வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் டிவிட்டர் தொடர்பான இந்த பிரச்சனையை எழுப்பியது. அதில் பல மின்னஞ்சல்களை மேற்கோள் காட்டப்பட்டிருந்தது. 


அதில் பிளாக் லைவ்ஸ் மேட்டர் தொடர்பான வரவிருக்கும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பான தகவல்களை, பொது மக்களின் பல்வேறு ட்விட்டர் கணக்குகளில் இருந்து Dataminr வழங்கியது.  


பாதுகாப்பு பிரச்சனை தொடர்பான வழக்கமான தணிக்கைகளை நடத்துவதாக கூறும் டிவிட்டர், "வாடிக்கையாளர்கள் இணக்கமாக இருப்பதை உறுதி செய்வதற்காக நாங்கள் எங்கள் கொள்கைகளை சரியாக உகந்த முறையில் செயல்படுத்துகிறோம், தொடர்ந்து அதைச் செய்வோம்" என்று கூறியுள்ளது.


"Dataminr போன்ற முக்கிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை மூன்றாம் தரப்பு தணிக்கைகளுக்கு உட்படுத்துவது போன்ற கடுமையான தரக் கட்டுப்பாடுகளை நாங்கள் தொடர்ந்து செய்வதாக உறுதியளிக்கிறோம்" என்று, தன் மீதான கேள்விகளுக்கு டிவிட்டர் தெளிவாக பதிலளித்துள்ளது.


இதையும் படிக்கலாமே | நான்காம் நாளாக தொடரும் ஆர்மீனியா-அஜர்பைஜான் போரும், 'மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டதா?' என்ற அச்சமும்... 


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR