Ulefone Power Armor X11 Pro Price: Ulefone அதன் சமீபத்திய Ulefone Power Armor X11 Pro ஸ்மார்ட்போனை உலகளவில் AliExpress-ல் அறிமுகப்படுத்தியுள்ளது. கடுமையான மற்றும் தீவிர வெளிப்புற நிலைமைகளைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பவர் ஆர்மர் X11 ப்ரோ சாகசக்காரர்களுக்கு சரியான துணை. அறிமுகத்தையொட்டி இந்த போனுக்கு பெரும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் இப்போது இந்த ஸ்மார்ட்போனை அதிக தள்ளுபடி விலையில்ரூ. 11,178 -க்கு வாங்க முடியும். ஒரே கண்டிஷன் என்னவென்றால் AliExpress-ல் மட்டுமே வாங்க முடியும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Ulefone பவர் ஆர்மர் X11 ப்ரோ 


Ulefone Power Armor X11 Pro 5.45-inch HD+ (720x1440p) டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. வெளிப்புற பயன்பாட்டிற்காக குறிப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது, தொலைபேசி IP68/69K மற்றும் MIL-STD - 810G இராணுவ தர சான்றிதழுடன் வருகிறது. இது தூசி, அழுக்கு ஆகியவற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்கும் வகையிலும், வாட்டர் ப்ரூப் போனாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 1.5 மீட்டர் ஆழம் வரையிலான நீரில் 30 நிமிடங்கள் வரை நீர்ப்புகாமல் இருக்கும்.


மேலும் படிக்க | இதை செய்தால் போதும் மின்கட்டணம் பாதியாக குறையும்


Ulefone பவர் ஆர்மர் X11 ப்ரோ பேட்டரி


Ulefone Power Armour X11 Pro பேட்டரி ஆயுள் ஆகியவற்றிற்காக மற்ற வலுவான ஸ்மார்ட்போன்களிலிருந்து தனித்து நிற்கிறது. ஃபோன் 8150mAh பேட்டரியுடன் வருகிறது. இது மிதமான பயன்பாட்டில் மூன்று நாட்கள் வரை நீடிக்கும். 5W OTG ரிவர்ஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. MediaTek Helio octa-core கேமிங் செயலி மூலம் இயக்கப்படுகிறது. இது 4GB ரேம் மற்றும் 64GB சேமிப்பகத்துடன் வருகிறது. 128GB வரை விரிவாக்கக்கூடியது.


Ulefone பவர் ஆர்மர் X11 ப்ரோ கேமரா


16MP பிரதான கேமரா மற்றும் பின்புறத்தில் டெப்த் சென்சார் உள்ளது. செல்ஃபிக்கு 5 எம்பி முன் கேமரா உள்ளது. மற்ற சுவாரஸ்யமான அம்சங்களில் கைரேகை சென்சார், புரோகிராம் செய்யக்கூடிய பக்க விசைகள், இரட்டை சிம் ஸ்லாட்டுகள், மைக்ரோ எஸ்டி ஸ்லாட், என்எப்சி, ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ், கையுறை முறை போன்றவை அடங்கும்.


Ulefone Power Armor X11 Pro விலை


இப்போது Ulefone Power Armour X11 Pro-ஐ AliExpress-ல் மட்டும் ரூ. 11,178-க்கு தள்ளுபடி விலையில் வாங்கலாம். இந்த ஒப்பந்தம் செப்டம்பர் 23, 2022, 11:59 pm உடன் முடிவடைகிறது. அதன் பிறகு விலை அதிகரிக்கும்.


மேலும் படிக்க | Vivo: டாப் கிளாஸில் களமிறங்கும் விவோவின் அடுத்த மொபைல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ