iPhone 12-ல் இதுவரை இல்லாத மிகப்பெரிய தள்ளுபடி: பிளிப்கார்ட் விற்பனையில் ஜாக்பாட்!!
பிளிப்கார்ட் செயலியை பயன்படுத்தும்போது, அதில் iPhone 12 பட்டியல்களில் தள்ளுபடிகள் பற்றிய விவரங்கள் காணப்படும்.
Flipkart Big Diwali Sale: மிகப்பெரிய தீபாவளி விற்பனை (Big Diwali Sale) பிளிப்கார்டில் மீண்டும் தொடங்கியுள்ளது. கடந்த முறை போலவே, இந்த முறையும் ஐபோன் 12 பற்றிய பேச்சு மிகப்பெரியதாக உள்ளது.
ஐபோன் 12 (iPhone 12) மீண்டும் மிக மலிவான விலையில் விற்பனையில் கிடைக்கிறது. கடந்த சேலில் வாங்க முடியாதவர்கள் இப்போது மீண்டும் வந்துள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு iPhone 12-ஐ வாங்கலாம். இந்த சேலில் ஐபோன் 12 ரூ.53,999-க்கு கிடைக்கிறது. இது முன்பு இருந்த அதே விலைதான் என்றாலும், இப்போது அதிக தள்ளுபடி கிடைக்கிறது. நீங்கள் சரியான கட்டண முறைகளைப் பயன்படுத்தினால், 64 ஜிபி கொண்ட ஐபோன் 12-ஐ ரூ. 49,999-க்கு வாங்கலாம்.
ஐபோன் 12 விலை குறைக்கப்பட்டுள்ளது
ஐபோன் 13 அறிமுகத்துக்குப் பிறகு, ஐபோன் 12-ன் விலை குறைகக்கப்பட்டது. அதன் பிறகு, ஐபோன் 12 64 ஜிபி தற்போது ஆப்பிள் ஸ்டோரில் ரூ.65,900-க்கு கிடைக்கிறது. நீங்கள் ஆப்பிள் (Apple) ஆன்லைன் ஸ்டோர் அல்லது ஆஃப்லைன் கடையில் இருந்து iPhone 12 ஐ வாங்கினால், அந்த புதிய விலையை செலுத்த வேண்டியிருக்கும். Flipkart -ல் வாங்கினால் சுமார் 12,000 ரூபாய் குறைவாக இதை வாங்கலாம்.
ALSO READ: பிளிப்கார்ட் சேலில் படு டிமாண்டில் இருக்கும் டாப் 5 ஸ்மார்ட்போன்களின் பட்டியல்
பிளிப்கார்டில் ரூ.4,000 கூடுதல் தள்ளுபடி கிடைக்கிறது
பிளிப்கார்டில் ஐபோன் 12-ஐ இன்னும் மலிவான விலையிலும் வாங்கலாம். உங்களிடம் எஸ்பிஐ கார்டு இருந்தால், கூடுதலாக ரூ.4,000 தள்ளுபடி கிடைக்கும். தள்ளுபடிக்குப் பிறகு, iPhone 12 64GB இன் விலை ரூ.49,999 ஆக குறைந்துவிடும். இது கடந்த ஆண்டு அபாரமான வெற்றியைக் கண்ட ஐ போன் மாடலுக்கு நீங்கள் செலுத்தக்கூடிய மிகக் குறைந்த விலையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிளிப்கார்ட் செயலியில் தள்ளுபடிகள் பற்றி தெரிந்துகொள்ளலாம்
பிளிப்கார்ட் செயலியை பயன்படுத்தும்போது, iPhone 12 பட்டியல்களில் தள்ளுபடிகள் பற்றிய விவரங்கள் காணப்படும். ஆனால் இணையதளத்தைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், உங்கள் கார்ட்டில் உள்ள கட்டணப் பக்கத்தை அடையும் போது இந்த தள்ளுபடிகளைப் பற்றிய விவரங்களைக் காண முடியும். ரூ.1,250-க்கான இரண்டு தள்ளுபடிகளும் ரூ.1,500-க்கான ஒரு தள்ளுபடியும் உள்ளன. இவற்றில் மட்டும் மொத்தமாக உங்களுக்கு ரூ.4,000 மதிப்பிலான லாபம் கிடைக்கும்.
iphone 12 இல் பரிமாற்றச் சலுகை
iPhone 12 வாங்கும் போது பிளிப்கார்ட் (Flipkart), பைஜூஸ் கல்வி நிறுவனத்தில் இலவச கணிதம் மற்றும் அறிவியல் வகுப்புகளுக்கான அணுகலையும் அளிக்கின்றது. இது இந்த விற்பனையில் கிடைக்கும் மற்றொரு நன்மையாகும்.
ஐபோன் 12-லில் இதைவிட அதிக சலுகைகளையும் பெறலாம். போனில் ரூ.14,950 வரை எக்ஸ்சேஞ்ச் சலுகையும் கிடைக்கிறது. நீங்கள் பழைய போனை பரிமாற்றிக்கொண்டால், அதாவது எக்ஸ்சேஞ் செய்தால், ஐபோன் 12 ஐ சுமார் 35 ஆயிரம் ரூபாய்க்கு வாங்க முடியும்.
ALSO READ: iPhone SE 3 அறிமுகம் எப்போது? என்னென்ன அம்சங்கள் இருக்கும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR