மிக மிக மலிவு விலையில் நல்ல ரீசார்ஜ் திட்டம்... ஐபிஎல் வெறியர்களே பயன்படுத்திக்கோங்க!
Vodafone Idea Data Recharge Plan: மிக குறைந்த விலையில் தற்போது வோடபோன் ஐடியா நிறுவனம் ஒரு டேட்டா ரீசார்ஜ் பிளானை அறிமுகப்படுத்தி உள்ளது.
Vodafone Idea 19 Rupees Data Recharge Plan: உலகின் மிகப்பெரிய டி20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 22ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. பல்வேறு நகரங்களில் நடைபெறும் இந்த தொடர் மே 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனால் இந்த இரண்டு மாதங்களில் கிரிக்கெட் ரசிகர்களை கையில் பிடிக்கவே முடியாது எனலாம்.
இரவு 7 மணிக்கு டாஸ் போடும் போதிருந்து கடைசி ஓவரின் கடைசி பால் வரை ஆட்டத்தை பார்க்க விரும்புவார்கள். ஞாயிறுக்கிழமைகளில் மாலை மற்றும் இரவு என 2 போட்டிகள் நடைபெறும். அதேபோல், முன்பு போல் அனைவரும் தொலைக்காட்சியில் மட்டும் கிரிக்கெட் போட்டியை பார்ப்பது கிடையாது என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். தொலைக்காட்சியில் பார்ப்பதை விட மொபைல் மற்றும் லேப்டாப்களில் ஆட்டத்தை பார்ப்பவர்களே தற்போது அதிகம்.
ஐபிஎல் ரீசார்ஜ் பிளான்கள்
ஐபிஎல் தொடரை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் பார்க்கலாம். அதேபோல், ஓடிடியில் மொபைல், லேப்டாப் உள்ளிட்ட பல சாதனங்களில் பார்க்க ஜியோ சினிமா தளம் உள்ளது. ஜியோ சினிமா தளத்தில் ஐபிஎல் போட்டிகளை இலவசமாக பார்க்கலாம். ஆனால், ஐபிஎல் போட்டிகளை பார்க்க டேட்டா அவசியமாகிறது. நீங்கள் ஜியோ மட்டுமின்றி ஏர்டெல், வோடபோன் ஐடியா என எந்த சிம் வைத்திருந்தாலும் ஜியோ சினிமாவில் இலவசமாக காணலாம், ஆனால் போட்டிகளை பார்க்க போதுமான டேட்டா வேண்டுமல்லவா.
மேலும் படிக்க | ஓடிடி மெகா ஆஃபர்! 75 ரூபாய்க்கு 24 ஓடிடி சப்ஸ்கிரிப்சன் பெறலாம் - மிஸ் பண்ணிடாதீங்க
நீங்கள் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ வைஃபை வைத்திருப்பவர் என்றால் பெரிய பிரச்னை இருக்காது. ஆனால், மொபைல் டேட்டாவை நம்பி ஐபிஎல் போட்டிகளை பார்ப்பது கடினம்தான். தற்போது ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் 5ஜி சேவையை வழங்கி வந்தாலும் இவை, 5ஜி ஸ்மார்ட்போன் இல்லாத நபர்களுக்கு இந்த சேவையும் கிடைக்காது. எனவேதான், ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் ஐபிஎல் போட்டிகளுக்கு என்றே பிரத்யேகமாக பல்வேறு பிரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்களை அறிமுகப்படுத்தியிருக்கின்றன.
குறைந்த விலையில் திட்டங்கள்...
இதில் மிக குறைந்த விலையில் தற்போது வோடபோன் நிறுவனம் ஒரு ரீசார்ஜ் பிளானை அறிமுகப்படுத்தி உள்ளது. வெறும் 19 ரூபாயில் நீங்கள் எந்த இடையூறுமின்றி ஒரு ஐபிஎல் போட்டிகளை கண்டுகளிக்கலாம். ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தொலைத்தொடர்பு துறையில் மிகுந்த ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், வாடிக்கையாளர்களை தக்கவைக்கும் பொருட்டும், புதிய வாடிக்கையாளர்களை கண்டடைவதற்கும் பல சலுகைகளையும், குறைந்த விலையில் நல்ல ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன.
49 ரூபாய் பிளானில் மாற்றம்...
அந்த வகையில், சமீபத்தில் 49 ரூபாய்க்கான ரீசார்ஜ் திட்டத்தை மாற்றம் செய்து வழக்கமாக அதில் வழங்கப்பட்டு வந்த டேட்டாவை விட மூன்று மடங்காக உயர்த்தியது. அதாவது முன்பு 6ஜிபி டேட்டா அதில் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 20ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இருப்பினும், இதன் வேலிடிட்டி என்பது 1 நாள்தான்.
அதாவது, நீங்கள் ஒரு நாளில் எப்போது ரீசார்ஜ் செய்தாலும் இரவானாலும் சரி, பகலானாலும் சரி அந்த திட்டம் சரியாக இரவு 11.59 மணிக்கு காலாவதியாகிவிடும். குறிப்பாக, இதில் காலிங், எஸ்எம்எஸ் போன்ற வசதிகள் கிடைக்காது, இது Add-on பிளான் ஆகும். இதனை பெற நீங்கள் அடிப்படை திட்டத்தை வைத்திருக்க வேண்டும்.
புதிய பிளான்
இந்நிலையில், இதேபோல் தற்போது 19 ரூபாய்க்கான ரீசார்ஜ் திட்டத்தை வோடபோன் அறிமுகப்படுத்தி உள்ளது. அதாவது 49 ரூபாய் பிளான் போல் அதே 1 நாள் வேலிடிட்டி ஆகும். இதுவம் Add-on பிளான்தான். இதனை பெற அடிப்படை திட்டத்தை வைத்திருக்க வேண்டும். இந்த 19 ரூபாய் பிளானில் 1ஜிபி டேட்டா கிடைக்கும். எனவே அவசர தேவைக்கு இந்த ரீசார்ஜ் திட்டத்தை பயன்படுத்தலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ