40 ரூபாயில் நான்கு பேர் 5ஜி டேட்டா யூஸ் பண்ணலாம்! நெட்பிளிக்ஸ், பிரைம், ஹாட்ஸ்டார் இலவசம்

Airtel Family Plan Rs 40 per day: ஏர்டெல் ஃபேமிலி பிளான் நாள் ஒன்றுக்கு 40 ரூபாய் செலவில் நான்கு பேர் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த திட்டத்தில், Netflix, Amazon Prime மற்றும் Disney + Hotstar ஆகிய மூன்றின் இலவச சந்தாவைப் பெறுவீர்கள்.

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 6, 2024, 12:28 PM IST
  • ஏர்டெல் பேம்லி பிளான் தினசரி 40 ரூபாய் செலவு
  • குடும்பத்தில் 4 பேர் பயன்படுத்திக் கொள்ளலாம்
  • நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார் இலவசம்
40 ரூபாயில் நான்கு பேர் 5ஜி டேட்டா யூஸ் பண்ணலாம்! நெட்பிளிக்ஸ், பிரைம், ஹாட்ஸ்டார் இலவசம் title=

ஏர்டெல் நாட்டின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாகும். ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்காக ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்ட் மற்றும் பிராட்பேண்ட் திட்டங்களைக் கொண்டுள்ளது. கூடுதலாக ஏர்டெல் ஃபேமிலி பிளான்களும் உண்டு. குடும்ப உறுப்பினர்கள் சேர்ந்து இந்த திட்டத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம். நான்கு பேர் யூஸ் பண்ணிணாலும் ஒரே ஒரு பில் மட்டுமே செலுத்தினால் போதும். இது மட்டுமின்றி, Netflix, Amazon Prime மற்றும் Disney + Hotstar ஆகிய மூன்று ஓடிடிகளின் இலவச சந்தாவைப் உபயோகிக்கலாம். அதிக திரைப்படம், வெப்சீரீஸ் பார்ப்பவர்களுக்கு இந்த பேம்லி பிளான் சூப்பர் ஜாக்பாட் என்றே சொல்லலாம். ஏர்டெல்லின் இந்த போஸ்ட்பெய்ட் விலை ரூ.1199 ஆகும். 

மேலும் படிக்க | ஜியோ ஃபைபர் மெகா ஜாக்பாட்! 1000ஜிபி டேட்டா, 15க்கும் மேற்பட்ட OTTகள் 50 நாட்கள் இலவசம்

ஏர்டெல்லின் ரூ.1199 போஸ்ட்பெய்ட் பிளான்

ஏர்டெல்லின் ரூ.1199 போஸ்ட்பெய்ட் திட்டமானது 1 வழக்கமான மற்றும் 3 இலவச ஆட்-ஆன் இணைப்புகளுடன் வருகிறது. அதாவது நீங்கள் பயன்படுத்த மொத்தம் 4 சிம்கள் கிடைக்கும். இந்த திட்டத்தில், நான்கு பயனர்களும் அன்லிமிடெட் அழைப்பு மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் பெறுகிறார்கள். டேட்டாவைப் பற்றி நாம் பேசினால், திட்டத்தில் மொத்தம் 240ஜிபி மாதாந்திர தரவு கிடைக்கிறது. இதில் மெயின் கனெக்ஷன் 150ஜிபி மற்றும் ஒவ்வொரு ஆட்-ஆன் இணைப்புக்கும் 30ஜிபி டேட்டா கிடைக்கும். 

ஏர்டெல் டேட்டா ரோல் ஓவர் பிளான்

இந்த திட்டத்தில் 200ஜிபி டேட்டா ரோல்ஓவர் வசதியும் உள்ளது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் திட்டத்தில் அதிகபட்சமாக 9 ஆட்-ஆன் இணைப்புகளைச் சேர்க்கலாம் ஆனால் ஒவ்வொரு இணைப்புக்கும் கூடுதலாக ரூ.299 செலுத்த வேண்டும்.

ஏர்டெல் ஓடிடி பிளான்கள்

இந்த பிளானில் இருக்கும் OTT நன்மைகளைப் பற்றி பேசுகையில், வாடிக்கையாளர்கள் திட்டத்தில் பல OTT இயங்குதளங்களுக்கான சப்ஸ்கிரிப்சனை பெறுகிறார்கள். இதில் Netflix அடிப்படையின் மாதாந்திர சந்தா, 6 மாதங்களுக்கு Amazon Prime மெம்பர்ஷிப் மற்றும் 1 வருடத்திற்கான Disney + Hotstar மொபைல் சந்தா ஆகியவை அடங்கும். இந்த திட்டத்தில் ஹேண்ட்செட் பாதுகாப்பு, ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ப்ளே மற்றும் வின்க் பிரீமியம் ஆகியவை அடங்கும். மாதத்திற்கு ரூ.300 செலுத்தி Netflix ஹெச்டி குவாலிட்டிக்கும், மாதம் ரூ.450 செலுத்தி Netflix பிரீமியத்தையும் பெற்றுக்கொள்ளலாம். இது வாடிக்கையாளரின் தனிப்பட்ட விருப்பம் மட்டுமே.

மேலும் படிக்க | பைக் விற்பனையில் பட்டையை கிளப்பிய டாப் 6 நிறுவனங்கள் - மார்ச் மாத நிலவரம் இதோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News