காதலர் தின வாரம் களைகட்டி வரும் நிலையில் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்காக புதிய சலுகையை அறிமுகப்படுத்தியது.  ஜியோ வழங்கும் இந்த ரீசார்ஜ் திட்டத்தை நீங்கள் பயன்படுத்தி கொள்வதன் மூலம் உங்களுக்கு கூடுதல் டேட்டா, பரிசுகள் மற்றும் உணவு ஆர்டர்களில் தள்ளுபடிகள் போன்ற பலவிதமான நன்மைகள் கிடைக்கிறது.  தற்போது ஜியோ வழங்கும் காதலர் தின சலுகை பற்றிய முழுமையான விவரங்களை இங்கே பார்க்கலாம்.  காதலர் தின சலுகையாக உங்களுக்கு நான்கு கூடுதல் நன்மைகள் வழங்கப்படுகிறது.  இதில் கூடுதலாக 12ஜிபி 4ஜி டேட்டா, ரூ.4,500 அல்லது அதற்கு மேற்பட்ட விமான முன்பதிவுக்கு ரூ.750 தள்ளுபடி, ஃபெர்ன்ஸ் அண்ட் பெட்டல்ஸ் குறைந்தபட்ச ஆர்டருக்கு ரூ.799, இலவச பர்கருக்கு ரூ.105 தள்ளுபடி, மெக்டொனால்டுக்கு ரூ.199 செலுத்த வேண்டும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | இந்தியாவின் ’லித்தியம் புதையல்’ பேட்டரி துறையில் சீனாவை பின்னுக்கு தள்ளும்..! எப்படி?



12ஜிபி கூடுதல் 4ஜி டேட்டாவை ரிடீம் செய்ய, பயனர்கள் மை ஜியோ செயலியில் இருந்து 'வவுச்சர்' என்பதற்கு செல்ல வேண்டும்.  விமான முன்பதிவுக்கான ரூ.750 தள்ளுபடியை நீங்கள் விரும்பினால், கூப்பன் குறியீடு விவரங்களுக்கு மை ஜியோ செயலியில் உள்ள 'கூப்பன்கள் மற்றும் வின்னிங்ஸ்' என்பதற்கு செல்ல வேண்டும்.  ஃபெர்ன்ஸ் மற்றும் பெட்டல்களுக்கான ரூ.150 தள்ளுபடி கூப்பன் குறியீட்டைத் தேடுபவர்கள் 'கூப்பன்கள் மற்றும் வெற்றிகள்' என்பதிலிருந்து பார்க்கலாம்.  மெக்டொனால்டின் சலுகையைப் பொறுத்தவரை வாடிக்கையாளர்கள் ரூ.200 அல்லது அதற்கு மேல் ஆர்டர் செய்தால், ரூ.105 மதிப்புள்ள மெக்அலூ டிக்கி அல்லது சிக்கன் கபாப் பர்கரை இலவசமாக வழங்கப்படுகிறது. 


ரிலையன்ஸ் ஜியோ காதலர் தின சலுகை ரூ.249, ரூ.899 மற்றும் ரூ.2999 ஆகிய திட்டங்களுக்கு பொருந்தும். அதிலும் குறிப்பாக பிப்ரவரி 10 அல்லது அதற்குப் பிறகு ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த பலன் கிடைக்கும்.  கூப்பன்கள் ரீசார்ஜ் செய்த 72 மணி நேரத்திற்குள் மை ஜியோ ஆப் கணக்கில் வரவு வைக்கப்படும் மற்றும் 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது.  ரூ.249 திட்டம் உங்களுக்கு தினசரி 23 நாட்கள் வேலிடிட்டியுடன் 2ஜிபி மொபைல் டேட்டாவை வழங்குகிறது.  ரூ.899 திட்டம் 90 நாட்கள் வேலிடிட்டியுடன் ஒரு நாளைக்கு 2.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது.  ரூ.2999 திட்டமானது 388 நாட்கள் வேலிடிட்டியுடன் தினமும் 2.5ஜிபி மொபைல் டேட்டாவை வழங்குகிறது.  மேற்கூறிய அனைத்து திட்டங்களும் அன்லிமிடெட் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ டிவி, ஜியோ சினிமா,மற்றும் ஜியோ க்ளவுட்-க்கான அணுகலை வழங்குகிறது.


மேலும் படிக்க | Flipkart Sale: காதலர் தினத்தை ஒட்டி சாம்சங் போனில் கன்னாபின்னானு தள்ளுபடி, முந்துங்கள்!!