பிப்ரவரி 7 அன்று அறிமுகப்படுத்தப்படும் Oneplus 11, 11R ஸ்மார்ட்போன்கள்!
OnePlus Cloud 11: ஒன்பிளஸின் கிளவுட் 11 நிகழ்வின் போது இந்தியாவில் பிப்ரவரி 7 அன்று OnePlus 11 5G, OnePlus 11R 5G, OnePlus Pad, OnePlus Buds Pro 2, OnePlus TV 65 Q2 Pro, OnePlus Keyboard ஆகியவற்றை அறிமுகப்படுத்த உள்ளது,.
Oneplus Launch Event: ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனுக்காக காத்திருக்கும் அனைவருக்கும் பிப்ரவரி மாதம் மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கிறது. இந்த மாதம் நிறுவனம் தனது இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை கொண்டு வருகிறது. பிப்ரவரி மாதம் நிறுவனம் OnePlus 11 மற்றும் OnePlus 11R ஐ அறிமுகப்படுத்த உள்ளது. பட்ஜெட் விலையில் நல்ல ஸ்மார்ட்ஃபோனை விரும்பும் பயனர்களுக்கு 11R சரியானதாக இருக்கும். பிப்ரவரி 7 ஆம் தேதி ஒன்பிளஸின் கிளவுட் 11 நிகழ்வின் (OnePlus Cloud 11 Event) போது ஒன்பிளஸ் 11 5ஜி, ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2, ஒன்பிளஸ் டிவி 65 க்யூ2 ப்ரோ, இந்தியாவில் தனது முதல் ஆண்ட்ராய்டு டேப்லெட் உட்பட ஆறு புதிய தயாரிப்புகளை ஒன்பிளஸின் கிளவுட் 11 நிகழ்வின் போது அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்பிளஸ் ஃபிளாக்ஷிப்புடன் என்ன திட்டமிடுகிறது என்று சொல்வது சற்று கடினம். ஒன்பிளஸ் 9 தொடரில் கடைசியாக ப்ரோ மற்றும் புரோ அல்லாத இரண்டு மாடல்களும் காணப்பட்டன. மூன்று மாதங்களுக்குப் பிறகு OnePlus 10 Pro மற்றும் OnePlus 10R ஆகியவை கொண்டு வரப்பட்டன. அதுமட்டுமில்லாமல் OnePlus 10T மாடலும் கொண்டுவரப்பட்டது. R மாடல் வரிசை ஸ்மார்ட்போன் மீண்டும் கொண்டுவரப்படுகிறது, அதாவது OnePlus 11 மற்றும் OnePlus 11R இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும்.
மேலும் படிக்க: ஜியோவின் 4ஜி மொபைல் இலவசம்...! 2 ஆண்டுகளுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டியதில்லை
டிப்ஸ்டர் இஷான் அகர்வாலின் கூற்றுப்படி, வரவிருக்கும் ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8+ ஜெனரேஷன் 1 செயலி மூலம் இயக்கப்படும். இதில் Adreno 730 கிராபிக்ஸுக்காக தரப்படும். 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் 11 ஆர் அடிப்படையில் கிடைக்கும் என்பதும் தெரியவந்துள்ளது.
OnePlus 11R ஆனது 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.7-இன்ச் AMOLED திரையைக் கொண்டிருக்கும். கேமராக்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் 11ஆரில் 50MP + 12MP + 2MP என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இடம்பெறலாம். முன்பக்கத்தை பொறுத்தவரை 16MP செல்பீ கேமரா இருக்கலாம். இதன் பின்புறத்தில் டிரிபிள் கேமரா அமைப்பு இருக்கும். பின்புறத்தில் 50MP முதன்மை சென்சார் கொடுக்கப்படும். இதன் பேட்டரி அளவு 5,000mAh ஆக இருக்கலாம். இது 100W வேகமான சார்ஜிங் ஆதரவையும் கொண்டிருக்கும்.
மேலும் படிக்க: iPhone 14: பிளிப்கார்ட்டில் இதுவரை இல்லாத மிகப்பெரிய தள்ளுபடி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ