வெரி சிம்பிள்! ஜஸ்ட் 4 ஸ்டெப்ஸ்.. வாட்ஸ்அப்பில் சேனலின் பெயரை எவ்வாறு எடிட் செய்வது
How To Edit WhatsApp Channel: உலகம் முழுவதும் பிரபலமாகி வரும் வாட்ஸ்அப் சேனல்கள் குறித்து முக்கிய அப்டேட். உங்கள் சேனலின் பெயர் எவ்வாறு எடிட் செய்வதென்று அறிந்துக்கொள்ளுங்கள்.
WhatsApp Channel News: இந்த ஆண்டு ஜூன் மாதம், வாட்ஸ்அப் அதன் சேனல்கள் அம்சத்தை இந்தியா உட்பட 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் அறிமுகப்படுத்தியது. தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் வாட்ஸ்அப் சேனல்களை உருவாக்குவதன் மூலம், அவர்களின் புதிய அப்டேட்டுக்கள் தொடர்ந்து கிடைக்கும். வாட்ஸ்அப் சேனல்கள் ஒரு வழி கருவியாக செயல்படுகின்றன. நீங்கள் எந்த செய்திக்கும் பதிலளிக்க முடியாது. ஆனால் எமோஜிகளைப் பயன்படுத்தலாம். பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், வணிகங்கள் தங்கள் சம்பந்தமான குறுஞ்செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் வாக்கெடுப்புகளை குறித்த செய்திகளை பகிரும் போது பார்த்துக் கொள்ளலாம்.
வாட்ஸ்அப் சேனல் இன்ஸ்டாகிராம், டெலிகிராம் சேனலை போல செயல்படுகிறது. இதில் சேனல் உருவாக்கி இருப்பபவர்கள் தங்களைப் பின்தொடர்பவர்களுக்காக புகைப்படங்கள், வீடியோக்கள், ஈமோஜிகள், வாய்ஸ் நோட்டுகள் போன்றவற்றை பதிவிடலாம். இதமூலம் மக்கள் தங்களுக்குப் பிடித்த படைப்பாளி அல்லது நபருடன் எளிதாக இணைய முடியும். உங்கள் விருப்பப்படி எந்த சேனலையும் நீங்கள் பின்தொடரலாம்.
நீங்கள் வாட்ஸ்அப் சேனலை உருவாக்கி இருந்தால், அதை தனிப்பயனாகவும் அல்லது பொதுப்பயனாகவும் வைத்துக்கொள்ளலாம். மேலும் வாட்ஸ்அப் சேனலை ஆரம்பித்து விட்டீர்கள், ஆனால் அதன் பிறகு நீங்கள் உங்கள் வாட்ஸ்அப் சேனலின் பெயரை மாற்ற வேண்டும் என நினைக்கிறீர்கள். அதாவது உங்கள் சேனலின் பெயர், பயோ மற்றும் ஐகானைப் புதுப்பிக்க நினைத்தால், எந்த நேரத்திலும் மாற்றிக்கொள்ளலாம். சேனல் பெயர் 100 எழுத்துகளுக்குள்ளே மட்டுமே இருக்க வேண்டும்.
மேலும் படிக்க - உங்களுக்கான வாட்ஸ்அப் சேனலை எப்படி உருவாக்குவது?
உங்கள் வாட்ஸ்அப் சேனலின் பெயரை எவ்வாறு எடிட் செய்யலாம்?
-- உங்கள் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப்பை ஓபன் செய்யவும்.
-- இப்போது உங்கள் சேனல் தகவல் பக்கத்தில் நுழைந்து, புதுப்பிப்புகள் செல்லவும்
-- இப்போது உங்கள் சேனலைத் திறக்க அதை என்பதை கிளிக் செய்யவும்.
-- இதற்குப் பிறகு, உங்கள் சேனல் பெயரை என்பதை கிளிக் செய்யவும்.
-- அதன் பிறகு, உங்களுக்கு பிடித்த பெயரை உள்ளிடவும்.
-- உங்கள் சேனலின் பெயரை மாடிய பிறகு செக் மார்க்கில் கிளிக் செய்யவும்
நீங்கள் வாட்ஸ்அப் சேனலை உருவாக்குவது எப்படி?
-- முதலில், வாட்ஸ்அப் நெட்வொர்க்கை திறந்து, அப்டேட்டுகளுக்குச் செல்லவும்.
-- அங்கு சேனல் ஐகானைக் கிளிக் செய்து மூலம் சேனலுக்குச் செல்லவும்.
-- பின்னர் சேனல் தொடங்குவதற்கு Start Channel கிளிக் செய்யவும்.
-- அதன் பிறகு கொடுக்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றவும்.
-- உங்கள் சேனல் உருவாக்கத்தை முடிக்க, சேனலின் பெயரை உள்ளிடவும்.
-- உங்களுக்கான வாட்ஸ்அப் சேனல் உருவானது.
மேலும் படிக்க - ChatGpt: வாட்ஸ்அப்-ல் உங்களுக்கு பதிலாக பதில் அளிக்கும்..! எப்படி தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ