ஆபாச சாட்டிங்கில் சிக்க வைக்கும் வாட்ஸ்அப் கால் - மோசடி கும்பலின் புதிய யுக்தி: எச்சரிக்கை

தெரியாத எண்ணில் இருந்து வரும் வாட்ஸ்அப் வீடியோ காலை நீங்கள் அட்டன் செய்தால், அவர்கள் ஆபாசமாக ஏதாவது செய்து அதனை நீங்கள் பார்ப்பதுபோல் வீடியோ ரெக்கார்டிங் செய்து மோசடியில் ஈடுபட வாய்ப்புகள் உள்ளன. அதனால் எச்சரிக்கை அவசியம்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 27, 2023, 09:22 PM IST
  • வாட்ஸ்அப்பில் புதிய சிக்கல்
  • வீடியோ கால் மூலம் மோசடி
  • எச்சரிக்கையாக இருங்கள்
ஆபாச சாட்டிங்கில் சிக்க வைக்கும் வாட்ஸ்அப் கால் - மோசடி கும்பலின் புதிய யுக்தி: எச்சரிக்கை title=

நாளுக்கு நாள் மாறும் தொழில்நுட்பம் நமது அன்றாட வேலையை எளிதாக்குகிறது. நாம் அனைவரும் வாட்ஸ்அப் உள்ளிட்ட தொழில்நுட்பத்தை சார்ந்திருப்பதை படிப்படியாக அதிகரித்து வருகிறோம். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் போது கவனமாக இருக்குமாறு நிபுணர்கள் பலமுறை கேட்டுக் கொண்டுள்ளனர். நம்மில் பெரும்பாலானோர் அதிகமான வாட்ஸ்அப்பை பயன்படுத்துகிறோம். ஆனால் இந்த வாட்ஸ்அப் உங்களை ஆபத்தில் ஆழ்த்தலாம். வாட்ஸ்அப்பை தவறாகப் பயன்படுத்தினால், உங்கள் கணக்கில் இருக்கும் லட்சங்கள் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய்கள் ஒரு நொடியில் பூஜ்ஜியமாகிவிடும். இந்த நாட்களில் மோசடி செய்பவர்கள் மக்களை எவ்வாறு குறிவைக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | Netflix புதிய அம்சம்: இனி படங்களை தேட வேண்டாம்.. அட்டகாசமான அப்டேட் இதோ

WhatsApp உங்களை சிக்கலில் தள்ளும்

நீங்கள் வாட்ஸ்அப் பயன்படுத்தினால் இந்த செய்தி உங்களுக்கானது. இந்த நாட்களில் வாட்ஸ்அப் மூலம் எந்த வகையில் மோசடி நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். வாட்ஸ்அப்பில் தெரியாத எண்ணிலிருந்து பல முறை வீடியோ அழைப்புகள் வரும், அது யாரென்று தெரியாமல் அல்லது யோசிக்காமல், நம் வழக்கமான பழக்கத்தால் உடனடியாக எடுக்கிறோம். ஆனால் இந்த எண் உங்கள் முன் சிரமங்களை உருவாக்கலாம். தெரியாத வாட்ஸ்அப் அழைப்பை எடுப்பதற்கு முன், அழைப்பாளரைச் சரிபார்க்க வேண்டும்.

வாட்ஸ்அப் காலில் ஆபாசம்

தெரியாத எண்ணில் இருந்து மீண்டும் மீண்டும் அழைப்புகள் வந்தால், அந்த தொலைபேசி எண்ணை வாட்ஸ்அப்பில் தடுக்க வேண்டும். அதாவது பிளாக் செய்ய வேண்டும். நீங்கள் செய்யாவிட்டால் அந்த வீடியோ அழைப்பின்போது அழைப்பாளர் தானே ஆபாசமான செயலைச் செய்து, உங்கள் படம் உள்ள திரையின் வீடியோவைப் பதிவுசெய்து, மோசடி செய்பவர் உங்களை அச்சுறுத்தலாம். அப்படியானால், உடனடியாக சைபர் செல்லில் புகார் அளிக்க வேண்டும்.

கவனமாக whatsapp பயன்படுத்தவும்

வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தும் போது, ​​ஒரு விஷயத்தை மனதில் வைத்துக் கொள்ளுங்கள், உங்கள் தனிப்பட்ட விவரங்களை தெரியாத நபர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள். உங்கள் வங்கி விவரங்களை வாட்ஸ்அப்பில் உள்ள மற்ற முக்கியமான தகவல்களுடன் வேறு யாருடனும் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கவும். மோசடி செய்பவர்கள் வரவிருக்கும் நாட்களில் புதிய வழிகளைக் கண்டுபிடித்துக்கொண்டே இருப்பார்கள். அதனால்தான் வாட்ஸ்அப்பை கவனமாகப் பயன்படுத்த வேண்டும்.

மேலும் படிக்க | இந்த 4 தொழில்களில் உடனடியாக AI மற்றும் Chatgpt பயன்படுத்தி அதிகமாக பணம் சம்பாதிக்கலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News