புதுடெல்லி: Vodafone Idea வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. வாடிக்கையாளர்களிடமிருந்து வந்த அதிக கோரிக்கை மற்றும் அதிகப்படியான தேவை காரணமாக, வோடபோன்-ஐடியா (Vi) தனது மலிவான பிரபலமான திட்டத்தை மீண்டும் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த திட்டம் மக்களிடையே மிகவும் பிரபலமாக இருந்த திட்டமாகும். இந்த திட்டத்தில் பல வகையான நன்மைகள் கிடைத்தால், Vi வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தை மிகவும் நம்பகமான, லாபகரமான திட்டமாக கருதினர். 


இது குறித்து கூறிய நிறுவனம், இது ஒரு மலிவு விலை ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமாகும் (Recharge Plan). இந்த திட்டத்தை செயல்படுத்த வாடிக்கையாளர்கள் ரூ .109 மட்டுமே செலவிட வேண்டும் என்றது.


வாடிக்கையாளர்களுக்கு இந்த வசதிகள் கிடைக்கும்


இந்த திட்டத்தின் கீழ், Vi நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு 1GB அதிவேக தரவு, 300 உள்ளூர் மற்றும் சர்வதேச எஸ்எம்எஸ், அனைத்து நெட்வொர்குகளிலும் வரம்பற்ற இலவச உள்ளூர்-எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்கள் செய்வதற்கான வசதியையும் வழங்குகிறது. இந்த அனைத்து வசதிகளும் திட்டம் செயல்படுத்தப்பட்ட அடுத்த 20 நாட்களுக்கு கிடைக்கும். வோடபோன் மற்றும் ஐடியா இணைப்பின் போது முதன்முறையாக தொடங்கப்பட்ட இந்த திட்டத்துக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த காரணத்தினால்தான் நிறுவனம் இத்திட்டத்தை தற்போது மீண்டும் துவக்கியுள்ளது.


ரூ 149 திட்டமும் சிறப்பாக உள்ளது


இதுவரை, வோடபோன்-ஐடியா-வின் 149 ரூபாய் ப்ரீ-பெய்ட் திட்டம் (Prepaid Plan) சந்தையில் மிகவும் மலிவான திட்டமாகக் கருதப்பட்டது. இதன் செல்லுபடியாகும் கால அளவு 28 நாட்களாகும். இந்த திட்டத்தில் தினசரி 3 ஜிபி தரவு கிடைக்கிறது. இது தவிர, இலவச அழைப்பு மற்றும் 300 எஸ்எம்எஸ் ஆகியவற்றின் பயனும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல், நிறுவனம் 1 ஜிபி கூடுதல் தரவு, Vi மூவீஸ் மற்றும் டிவி சந்தாக்களையும் வழங்குகிறது.


ALSO READ: Reliance Jio, Airtel மற்றும் Vodafone-Idea சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள், முழு விவரம் இங்கே!


ALSO READ: Jio, Airtel, Vi வழங்கும் அட்டகாசமான ரீசார்ஜ் திட்டங்கள்: முழு விவரம் உள்ளே


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR