Jio, Airtel, Vi வழங்கும் அட்டகாசமான ரீசார்ஜ் திட்டங்கள்: முழு விவரம் உள்ளே

மொபைல் போன்களில் தொலைபேசி அழைப்புகளுடன் பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை அம்சங்களையும் விரும்பும் மக்களுக்கு இன்று பல இணைய சலுகைகள் கிடைக்கின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 6, 2021, 01:35 PM IST
  • ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு பலவித ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது.
  • தினமும் 3GB அதிவேக தரவை வழங்கும் ஏர்டெல் திட்டம் 398 ரூபாய்க்கானது.
  • Vi வழங்கும் 249 ரூபாய் திட்டத்தில், பயனர்கள் ஒவ்வொரு நாளும் 1.5GB தரவைப் பெறுகிறார்கள்.
Jio, Airtel, Vi வழங்கும் அட்டகாசமான ரீசார்ஜ் திட்டங்கள்: முழு விவரம் உள்ளே   title=

புதுடெல்லி: மொபைல் போன்களில் தொலைபேசி அழைப்புகளுடன் பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை அம்சங்களையும் விரும்பும் மக்களுக்கு இன்று பல இணைய சலுகைகள் கிடைக்கின்றன. சமூக ஊடகங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பவர்களுக்கும், மொபைலில் திரைப்படங்களைப் பார்ப்பவர்களுக்கும் எப்போதும் அதிகமான இணையத் தரவு தேவைப்படுகிறது. Airtel, Vi மற்றும் Jio  போன்ற நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இதுபோன்ற பல திட்டங்களை வழங்குகின்றன. அதில் தினமும் 3GB தரவு கிடைக்கிறது. எந்த நிறுவனத்தின் திட்டம் மிகவும் சிறந்ததாக உள்ளது என்று இங்கே பார்க்கலாம். 

ஜியோவின் 349 ரூபாய் ப்ரீபெய்ட் திட்டம் 

ஜியோ (Jio) தனது வாடிக்கையாளர்களுக்கு பலவித ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. இவற்றில் அதிக அளவு இணைய தரவு கிடைக்கிறது. இந்த திட்டத்திற்கான கட்டணம் 349 ரூபாய் ஆகும். திட்டத்தில், மற்ற நெட்வொர்க்குகளில் அழைப்பதற்கு 1000 அழைப்பு நிமிடங்கள் கிடைக்கின்றன. மேலும் ஜியோவிலிருந்து ஜியோ இணைப்பிற்கு அழைக்க, வரம்பற்ற இலவச அழைப்பும் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் தினசரி 3GB தரவு கிடைக்கும். இது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். ஜியோவின் இந்த திட்டத்தில், ஜியோ செயலிகளின் இலவச சந்தாவும் தினசரி 100 எஸ்எம்எஸ் வசதியும் கிடைக்கிறது. 

ALSO READ: நம்புங்கள், இது உண்மை; Mi தளத்தில் அனைத்தும் 1 ரூபாய்க்கு!

ஏர்டெல் 398 ரூபாய் ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் (Airtel) அதன் இணைய பயனர்களுக்காக நல்ல திட்டங்களை வழங்குகிறது. தினமும் 3GB அதிவேக தரவை வழங்கும் ஏர்டெல் திட்டம் 398 ரூபாய்க்கானது. இந்த திட்டத்தில், அனைத்து நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற அழைப்பு கிடைக்கிறது. மேலும் இதில் FUP வரம்பு எதுவும் வழங்கப்படவில்லை. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் தன்மை 28 நாட்கள் ஆகும். இதில் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் கிடைப்பதோடு இந்த திட்டத்தில் கூடுதல் நன்மைகளும் கிடைக்கின்றன. 

Vi இன் 249 ரூபாய் ப்ரீபெய்ட் திட்டம்

Vi (வோடபோன்- ஐடியா) வழங்கும் 249 ரூபாய் திட்டத்தில், பயனர்கள் ஒவ்வொரு நாளும் 1.5GB தரவைப் பெறுகிறார்கள். நிறுவனம் தற்போது இரட்டை தரவு நன்மைகளை வழங்கி வருகிறது, அதாவது இந்த திட்டத்தில் தினமும் 3GB தரவு கிடைக்கும். இந்த திட்டம் அனைத்து நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற அழைப்பை வழங்குகிறது. இது தவிர, ஒவ்வொரு நாளும் 100 இலவச எஸ்எம்எஸ் பயனர்களுக்கு கிடைக்கிறது.

ALSO READ: நம்ப முடியாத விலையில் 2 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது Samsung

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News