BSNL எடுத்த இந்த முடிவு கைகொடுக்குமா? Airel, Jio, Vi அலறல்!

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை புதிய பயனர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 20, 2021, 02:57 PM IST
BSNL எடுத்த இந்த முடிவு கைகொடுக்குமா? Airel, Jio, Vi அலறல்! title=

புதுடெல்லி: அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) இப்போது தனியார் நிறுவனங்களுக்கு கடுமையான போட்டியை அளித்து வருகிறது. நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க எந்த வாய்ப்பையும் விடுவதில்லை. அதன்படி BSNL வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. 

பிஎஸ்என்எல் (BSNL) புதிய ப்ரீபெய்ட் பயனர்களுக்கு இலவசமாக 4ஜி SIM (4G SIM) கார்டு வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த சலுகை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. தற்போது இந்த சலுகை ஜூன் 30, 2021 வரை இருக்கும் என்றும் பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது. பயனர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப புதிய SIM கார்டையும் பெற முடியும். இல்லையென்றால்  தங்களிடம் ஏற்கனவே இருக்கும் வேறொரு நெட்வொர்க் வழங்குனரின் மொபைல் எண்ணை BSNL க்கு போர்ட் செய்தும் கொள்ள முடியும். 

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை புதிய பயனர்களை ஈர்க்கவும் 4ஜி SIM விற்பனையை அதிகரிக்கவும் உதவியாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கிறது.

ALSO READ | BSNL மற்றும் MTNL வாடிக்கையாளர்களுக்கு ஒரு Big News, விரைவில் 5G Network கிடைக்கும்!

நிறுவனம் இதற்கு முன்பும் இதே சலுகையை நீண்ட காலமாக வழங்கி வருகிறது. இதன் மூலம் தனது பயனர் எண்ணிக்கையை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அதிகரித்துள்ளது. ஆனால், இன்னும் 4ஜி சேவையை நிறுவனம் தொடங்கவில்லை என்பதால், நிறுவனம்  இன்னும்  3ஜி வேகத்திலேயே அதன் சேவைகளை வழங்குகிறது. மேலும் இந்த சலுகை ரூ.100 விலையிலான முதல் ரீசார்ஜ் கூப்பனை (FRC) தேர்ந்தெடுக்கும் வடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும். 

பிஎஸ்என்எல் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்த இலவச 4ஜி SIM கார்டை அனைத்து பயனர்களும் வாடிக்கையாளர் சேவை மையம் அல்லது நிறுவனத்தின் சில்லறை விற்பனையாளர் கடைகளில் பெறலாம். Sim பெறுவதற்கு முன்பு அடையாளச் சான்று மற்றும் முகவரி ஆதாரம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். 

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News