வோடபோன் ஐடியா, ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நிறுவனங்கள் சில மாதங்களுக்கு முன்பு தங்கள் திட்டங்களின் விலையை உயர்த்தியுள்ளன. Vodafone Idea (Vi) 2022 அல்லது 2023 ஆம் ஆண்டில் மீண்டும் ஒரு முறை ப்ரீபெய்ட் கட்டண உயர்வை செய்ய திட்டமிட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வோடபோன் ஐடியாவின் (Vodafone Idea) தலைமை நிர்வாக அதிகாரி ரவீந்தர் தக்கர் கூறுகையில், ஒரு மாத சேவை செல்லுபடி காலம் கொண்ட மலிவான திட்டத்தின் விலையை நிறுவனம் ரூ.99 ஆக நிர்ணயித்துள்ளது என்றார். இது 4ஜி சேவைகளைப் பயன்படுத்தும் பயனர்களுக்கு மிக அதிகமாக உள்ளது. இந்த ஆண்டு மீண்டும் திட்டங்களின் விலை அதிகரிக்கப்படலாம் என்று டக்கர் மேலும் கூறினார்.


இந்த அறிக்கை Vi இன் CEO விடம் இருந்து வந்தது


PTI அறிக்கையின்படி, ப்ரீபெய்ட் கட்டண உயர்வுக்கு இடையே இரண்டு ஆண்டுகள் இடைவெளி இருந்ததாகவும், இது மிகவும் நீண்ட இடைவெளி என்றும் டக்கர் கூறினார். எனினும், நிறுவனம் ஏற்கனவே 2022 அல்லது 2023 இல் ப்ரீபெய்ட் (Prepaid Plans) கட்டண உயர்வை செயல்படுத்துவதற்கான சரியான நேரத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறது. 


ALSO READ | பயனர்களுக்கு வாட்ஸ்அப் வழங்கும் அசத்தலான புதிய வசதி! 


வோடபோன் ஐடியா (Vi) வாடிக்கையாளர்கள் குறைந்து வருகின்றனர்


ஜியோ மற்றும் ஏர்டெல்லை விட வேடஃபோன் ஐடியா (Vi) வாடிக்கையாளர்கள் மிகவும் குறைவாக உள்ளனர். திட்டங்களின் விலையும் இதற்குக் காரணமாக இருக்கலாம். ஏனெனில் திட்டங்கள் விலை உயர்ந்த பிறகு, ஒரு வருடத்தில் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 26.98 கோடியில் இருந்து 24.72 கோடியாக குறைந்துள்ளது. கட்டணம் விலை உயர்ந்த பிறகும், சராசரி பயனர் வருவாய் 5 சதவீதம் குறைந்துள்ளது. 2020-21ல், ARPU 121 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது அது 115 ரூபாயாக மாறியுள்ளது.


வோடபோன் ஐடியாவிற்கு வணிக இழப்பு (Vi)


Vodafone Idea (Vi) இன் பிரச்சனைகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை. 2021 டிசம்பரில் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் நிறுவனத்தின் மொத்த இழப்பு ரூ.7,230.9 கோடியாக அதிகரித்துள்ளது. இது ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலாண்டில் ரூ.4,532.1 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | Recharge: குறைந்த விலையில் ஆஃபர்களை அள்ளி வழங்கும் BSNL..! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR