Recharge: குறைந்த விலையில் ஆஃபர்களை அள்ளி வழங்கும் BSNL..!

200 ரூபாய்க்கும் குறைவாக அதிவேக டேட்டா மற்றும் பல நன்மைகளை வாரி வழங்கும் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் மலிவுவிலை திட்டங்களின் நன்மைகளைப் பற்றி இங்கு தெரிந்து கொள்வோம். 

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 3, 2023, 08:56 AM IST
  • புதிய ரீச்சார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது பி.எஸ்.என்.எல்
  • ரூ.200 -க்கும் குறைவான விலையில் 2 ஜிபி வழங்கும் திட்டம் அறிமுகம்
  • ஜியோ, ஏர்டெல்லுக்கு போட்டியாக புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது பி.எஸ்.என்.எல்
Recharge: குறைந்த விலையில் ஆஃபர்களை அள்ளி வழங்கும் BSNL..!  title=

பி.எஸ்.என்.எல் நிறுவனம் அதன் ப்ரீப்பெய்ட் யூசர்களுக்கு பல கவர்ச்சிகரமான திட்டங்களை வாரி வழங்குகிறது. தனியார் நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ மற்றும் வோடாஃபோன் ஐடியா நிறுவனங்களுக்கு போட்டியாக பி.எஸ்.என்.எல் நிறுவனமும் சூப்பரான திட்டங்களை கைவசம் வைத்துள்ளது. குறிப்பாக, வாடிக்கையாளர்களை கவரும் வகையில் 200 ரூபாய்க்கும் குறைவாக பல ப்ரீப்பெய்ட் ரீச்சார்ஜ் திட்டங்களை வைத்துள்ளது. இந்த திட்டங்கள் அனைத்தும் தனியார் நிறுவனங்களுக்கே டஃப் கொடுக்கும் திட்டங்கள் ஆகும். 

ALSO READ | அட்டகாசமாய் அறிமுகம் ஆனது Realme 9i: விலை, பிற விவரங்கள் இதோ

ரூ.150 -க்கும் குறைவான திட்டங்கள்

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் இருக்கும் மிக குறைந்த விலை ரீச்சார்ஜ் திட்டம் என்றால், ரூ.99 திட்டம் தான். 22 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் அழைப்புகளை பெறலாம். ஆனால், இந்த திட்டத்தில் டேட்டா மற்றும் எஸ்.எம்.எஸ் அம்சங்கள் இருக்காது. இரண்டாவது குறைந்த விலை திட்டம் என்றால் ரூ.118. 26 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தில் நாள்தோறும் 0.5 ஜிபி தினசரி இலவச டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்களை யூசர்கள் பெறலாம். அடுத்ததாக 147 ரூபாய் திட்டம். 30 நாட்களில் 10 ஜிபி அதிவேக டேட்டா, இலவச வாய்ஸ் கால்கள் உள்ளிட்ட சேவைகளை நீங்கள் அன்லிமிட்டெடாக பெறலாம். 

புதிய திட்டங்கள்

பி.எஸ்.என்.எல் நிறுவனம் புதியதாக மூன்று ப்ரீப்பெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டங்கள் அனைத்தும் மற்ற நிறுவனங்கள் வழங்கும் ஆஃபர்களை விட சிறப்பான அம்சத்துடன் பி.எஸ்.என்.எல் கொண்டு வந்துள்ளது. குறிப்பாக 187 ரூபாய் திட்டத்தில் நீங்கள் நாள்தோறும் 2 ஜிபி டேட்டாவை 28 நாட்களுக்கு பெறலாம். அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்கள் மற்றும் நாள் ஒன்றுக்கு 100 எஸ்.எம்.எஸ்களை நீங்கள் அனுப்ப முடியும்.

ALSO READ | Fliplkart Offer: ரூ.299 -க்கு Realme 8 5G ஸ்மார்ட்போனை வாங்குவது எப்படி?

கூடுதல் விலை கொடுத்து மற்ற திட்டங்களைப் பயன்படுத்துவதைக் காட்டிலும், பரிசீலித்து அதில் பெஸ்டாக இருந்தால் பி.எஸ்.என்.எல்-ன் இந்த திட்டங்களை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News