பொதுவாகவே சமூக வலைதளங்களில் அனைவராலும் அதிகம் விரும்பி பயன்படுத்தப்படும் ஒரு செயலி என்றால் அது வாட்ஸ்அப் (Whatsapp) செயலி தான். இது அனைவருக்கும் அணுகுவதற்கு எளிதாக உள்ளதால் இதன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாட்ஸ்அப் நிறுவனம் அடிக்கடி வாடிக்கையாளர்களை கவரும் பொருட்டு பலவித அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது.
ALSO READ | Instagram: இனி இன்ஸ்டாவில் இந்த விஷயங்கள் மங்கலாக இருக்கும்! காரணம்?
அவ்வாறு வெளிவரும் புது அப்டேட்டுகளில் தற்போது அசத்தலான அப்டேட்டை அறிமுகம் செய்து இருக்கிறது. அதாவது ஆண்ட்ராய்டு போன்களில் இருந்து ஆப்பிள் ios போன்களுக்கு நேரடியாக chatகளை மாற்றுவதற்கான வசதியை வழங்குவதாக அறிவித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் வாட்ஸ்அப் (Whatsapp) நிறுவனம் வெளியிட்ட அப்டேட்டில், iOS பயனர்கள் தங்கள் chatகளை samsung மற்றும் Google pixel போன்களுக்கு மாற்ற அனுமதியளித்தது, இவை மற்ற சாதனங்களுக்கும் கூடிய விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
WABetaInfo அளித்த தகவலின் அடிப்படையில் chatஐ ios தளங்களுக்கு மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்மூலம் ஒரு தடவை மட்டும் chatகளை ஆண்ட்ராய்டில் இருந்து ஐபோன்களுக்கு மாற்றலாம், அதை தவறவிடும் பட்சத்தில் மீண்டும் chatகளை மாற்ற இயலாது. 'Move to iOS' செயலியை டவுன்லோடு செய்வதன் மூலம் contacts, chat, photos போன்றவற்றை பாதுகாப்பான முறையில் எளிதாக மாற்ற முடியும். டேட்டா மாற்றும் ஆப்ஷனை தேர்வு செய்ததும், அந்த செயலி தனிப்பட்ட wifi கனெக்ஷனை உருவாக்கி அருகிலுள்ள Android போன்களை காண்பிக்கும். அப்போது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை தேர்ந்தெடுக்க வேண்டும்.
பின்னர் security codeஐ உள்ளிட்டபின் மாற்றம் செய்வதற்கான செயல்முறை தொடங்கிவிடும். இந்த செயல்முறையின்போது, செல்போன் மற்றும் செயலியை ஆக்டிவாக வைத்திருக்க வேண்டும். மேலும் வாட்ஸ்அப் புகைப்படங்களை அனுப்புவதற்கு முன்னதாக, அதனை blur, pencil போன்றவற்றின் மூலம் எடிட் செய்யும் வசதியினையும் வழங்குகிறது.
ALSO READ | ரூ. 5000 கீழ் கிடைக்கும் சிறந்த Bluetooth ஸ்பீக்கர்கள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR