Best Recharge Plans: அதிகமான வாடிக்கையாளர்களை ஈர்க்க தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒவ்வொரு நாளும் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துகின்றன. இந்த திட்டங்களில், வாடிக்கையாளர்கள் அழைப்புகள் மற்றும் தரவுகள் மட்டுமல்லாமல், இன்னும் அதிக வசதிகளைப் பெற வேண்டும் என்ற நோக்குடன் நிறுவனங்கள் திட்டங்களை வடிவமைக்கின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வரிசையில், வோடபோன் ஐடியா (Vodafone Idea) தனது வாடிக்கையாளர்களுக்காக இரண்டு புதிய ப்ரீபெய்ட் (Prepaid Plans) திட்டங்களை அறிவித்துள்ளது. அவை ரூ.99 மற்றும் ரூ.109 ஆகும். இந்த திட்டங்களின் அனைத்து நன்மைகளையும் விரிவாக அறிய தொடர்ந்து படிக்கவும். 


ALSO READ | Vi Super Plan: BSNL, Jio-வை கலங்கடிக்கும் Vi 4GB தரவுத் திட்டம், எக்கச்சக்க நன்மைகள்


ரூ.99 திட்டம் 
இதில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மையுடன் வருகிறது. குரல் அழைப்பு நன்மையுடன் சேர்த்து பயனர்கள் 1 ஜிபி அளவிலான மொத்த டேட்டாவையும திட்டத்துடன் பெறுகிறார்கள். செல்லுபடியாகும் காலம் 18 நாட்கள். இந்த திட்டத்தில் எந்தவிதமான வெளிச்செல்லும் எஸ்எம்எஸ் நன்மைகளும் கிடையாது. 


ரூ.109 திட்டம் 
இதில் பயனர்களுக்கு ரூ.99 திட்டத்தின் அதே நன்மைகளை வழங்குகிறது. அதாவது 1 ஜிபி அளவிலான மொத்த டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு போன்றவைகளை வழங்குகிறது. இருப்பினும், இந்த திட்டம் 20 நாட்களுக்கு செல்லுபடியாகும். இதிலும் எந்தவிதமான வெளிச்செல்லும் எஸ்எம்எஸ் நன்மைகளும் கிடையாது. 


ALSO READ | Vodafone-Idea Prepaid Plans: அசத்தல் சலுகை, Vi யின் டபுள் டேட்டா பிளான் அறிமுகம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR