Vi Super Plan: BSNL, Jio-வை கலங்கடிக்கும் Vi 4GB தரவுத் திட்டம், எக்கச்சக்க நன்மைகள்

சமீபத்தில் Vi அதன் பயனர்களுக்கு ஒரு சிறந்த தரவுத் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதில் இலவச அழைப்பு, எஸ்எம்எஸ் மற்றும் பிரபலமான OTT செயலிகளுக்கான இலவச அணுகல் ஆகியவை தினமும் 4 ஜிபி தரவுடன் வழங்கப்படுகின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 17, 2021, 02:02 PM IST
  • அட்டகாசமான தரவுத் திட்டத்தை அறிமுகம் செய்தது வோடபோன் ஐடியா.
  • Vi ஒரு நாளைக்கு 4GB தரவை வழங்கும் மூன்று திட்டங்களைக் கொண்டுள்ளது.
  • வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவரில், பயனர்கள் வார இறுதி நாட்களில் அவர்களிடம் மீதமுள்ள தரவைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
Vi Super Plan: BSNL, Jio-வை கலங்கடிக்கும் Vi 4GB தரவுத் திட்டம், எக்கச்சக்க நன்மைகள்  title=

Vi amazing Internet Data Plans: ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் ஆகியவை தங்கள் பயனர்களை கவர்ந்திழுக்கும் வகையில் பல சக்திவாய்ந்த திட்டங்களை கொண்டு வந்துள்ளன. தொலைத்தொடர்பு நிறுவங்களின் போட்டியில், இந்த நிறுவனங்களுக்கு சரியான போட்டியாக இருக்கும் Vi (Vodafone Idea) மட்டும் எப்படி பின்தங்கியிருக்கும்?

சமீபத்தில் Vi அதன் பயனர்களுக்கு ஒரு சிறந்த தரவுத் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதில் இலவச அழைப்பு, எஸ்எம்எஸ் மற்றும் பிரபலமான OTT செயலிகளுக்கான இலவச அணுகல் ஆகியவை தினமும் 4 ஜிபி தரவுடன் வழங்கப்படுகின்றன.

Vi இன் திட்டத்தில் என்ன சிறப்பு என்று தெரிந்து கொள்ளுங்கள்

Vi ஒரு நாளைக்கு 4GB தரவை (Data Plans) வழங்கும் மூன்று திட்டங்களைக் கொண்டுள்ளது. இந்த திட்டங்கள் ரூ .299, ரூ 449 மற்றும் ரூ .699 என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மூன்று திட்டங்களில், நிறுவனம் தினசரி 4 ஜிபி தரவை FUP உடன் வழங்குகிறது. இந்த திட்டங்களின் சிறப்பு என்னவென்றால், அவை 'வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர்' (Weekend Roll Over) மற்றும் பிஞ்ச் ஆல் நைட் (Binge all night) போன்ற சியப்பு நன்மைகளுடன் கிடைக்கின்றன. 

ALSO READ:Vodafone-Idea Prepaid Plans: அசத்தல் சலுகை, Vi யின் டபுள் டேட்டா பிளான் அறிமுகம்

வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர் மற்றும் பிஞ்ச் ஆல் நைட் ஆகியவற்றின் சிறப்பு என்ன

வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவரில், பயனர்கள் வார இறுதி நாட்களில் அவர்களிடம் மீதமுள்ள தரவைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அதே நேரத்தில், பிஞ்ச் ஆல் நைட்டின் கீழ், நிறுவனம் இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை வரம்பற்ற தரவை வழங்குகிறது. மேலும் இந்த தரவு, திட்டத்தில் கிடைக்கும் தினசரி தரவுகளிலிருந்து கழிக்கப்படுவதில்லை.

மூன்று திட்டங்களுக்கும் என்ன வித்தியாசம்

செல்லுபடியாகும் கால அளவைத் தவிர (validity) மூன்று திட்டங்களிலும் வேறு எந்த வித்தியாசமும் இல்லை. நிறுவனத்தின் ரூ .299 திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும், ரூ 449 திட்டம் 56 நாட்களுக்கும் ரூ .699 திட்டம் 84 நாட்களுக்கும் செல்லுபடியாகும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. அனைத்து திட்டங்களிலும், நாடு முழுவதும் உள்ள அனைத்து நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற அழைப்புக்கான வாசதி வழங்கப்படுகிறது. இது தவிர, தினமும் 100 எஸ்.எம்.எஸ் மற்றும் Vi மூவிஸ் & டிவி கிளாசிக் ஆகியவற்றிற்கான இலவச அணுகலும் இந்த திட்டங்களில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன.

ALSO READ: Unbelievable Vi: வெறும் ரூ.11-க்கு தினமும் கிடைக்கும் வரம்பற்ற அழைப்பு, 4ஜிபி தரவு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News