டிஜிட்டல் இந்தியாவின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் வோடபோன் ஐடியா தனது வாடிக்கையாளர்களுக்கு பலவித சலுகைகளை வழங்கி வருகின்றது.  தற்போது வோடோபோன் ஐடியா இந்திய முழுவதும் உள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு வெறும் ரூ.99 விலையில் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது.  இதுதவிர நிறுவனம் கூடுதலாக தனது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு மதியம் 12:00 முதல் காலை 6:00 மணி வரை இலவச, அன்லிமிடெட் அதிவேக இரவுநேர டேட்டாவை ரூ.249 மற்றும் அதற்கு மேற்பட்ட விலையில் அன்லிமிடெட் ரீசார்ஜ் திட்டத்தை வழங்குகிறது.  உலகம் முழுவதிலும் அதிவேக டேட்டாவை தரும் நெர்வோர்க்காக வோடோபோன் விளங்குகிறது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | கோகோ கோலா ஸ்மார்ட்போன்: ரியல்மீ வெளியிட்ட டீசர்



வோடோபோன் வழங்கும் திட்டங்கள் அனைத்தும் அதன் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் அன்லிமிடெட் குரல் அழைப்புகள் மற்றும் டேட்டா சேவைகளை வழங்குகிறது.  சமீபத்தில், வோடபோன் ஐடியா ஒரு புதிய ரீசார்ஜ் சலுகையை அறிமுகப்படுத்தியது.  இது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ரீசார்ஜ் பேக்குகளுடன் 5ஜிபி வரை கூடுதல் டேட்டாவை வழங்குகிறது.  இந்த மலிவு விலையிலான ரீசார்ஜ் திட்டத்தை வாடிக்கையாளர்கள் வோடோபோன் இணையதளம் மூலமாகவோ அல்லது வோடோபோன் செயலி மூலமாக வாங்கி கொள்ள முடியும்.  


வோடோபோன் வழங்கும் ரூ.99 ரீசார்ஜ் திட்டத்தின் நன்மைகள்:


1) வோடோபோன் வழங்கும் இந்த குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கூடிய ஃபுல் டாக்டைம் மற்றும் 200 எம்பி டேட்டாவையும் பயன்படுத்தி கொள்ள முடியும்.


2) இந்த ரீசார்ஜ் திட்டமானது வாடிக்கையாளர்களுக்கு உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகளை வினாடிக்கு 2.5 பைசா என்ற விகிதத்தில் வழங்குகிறது.  ஆனால் இதில் எஸ்எம்எஸ் சேவை வழங்கப்படவில்லை.


சமீபத்தில் ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.99 மலிவு விலையில் வழங்கி வந்த ரீசார்ஜ் திட்டத்தை ரூ.155 ஆக மாற்றியது.  இந்நிலையில் வோடோபோன் நிறுவனம் ஏர்டெல்லுக்கு போட்டியாக தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.99 விலையில் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது.


மேலும் படிக்க | Top 5 ChatGPT: 2023 ஆம் ஆண்டில் முதல் 5 சிறந்த ChatGPT குரோம் எக்ஸ்டன்ஸ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ