ஐபோன் என்றாலே பணக்காரர்கள் மட்டும் வாங்கும் போன் என்ற ஒரு பெயரும் உள்ளது. ஏனென்றால் ஆயிரக்கணக்கில் ஸ்மார்ட்போன் கிடைக்கும்போது, லட்சக்கணக்கான ரூபாய் விலையில் ஐபோன் விற்றால் சாமானியர்களால் வாங்கிவிட முடியுமா? சுமாரான போனே 2,000 ரூபாய்க்கு குறைந்த விலையில் கிடைக்காது என்ற நிலையில், iPhone 15 Pro Max போன் 1352 ரூபாய்க்கு விற்கப்பட்டால் யாராவது சந்தர்ப்பத்தை கை நழுவ விடுவார்களா?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிலும் இந்த விற்பனை Flipkart இல் என்றால், நம்பத் தான் வேண்டியிருக்கும். இந்த விலை 250 ஜிபி வகை ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் போனுக்கானது. இந்த விளம்பரத்தைப் பார்த்த ஒருவர் போனுக்கு உடனடியாக ஆர்டர் போட்டுவிட்டார். அவரது அனுபவம் தான் வைரலாகிறது.  


ஐபோன் 16 சீரிஸ் அறிமுகம்


ஐபோன் 16 சீரிஸ் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகும், ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மீதான ஆர்வம் மக்களிடையே குறையவில்லை. புதிய சீரிஸ் போன் அறிமுகமானது, கடந்த ஆண்டு அறிமுகமான ஐபோனின் விலை குறைவாக இருந்தால் பலரும் வாங்குவது வழக்கம் தான். ஈ-காமர்ஸ் இணையதளங்களில் இந்த ஐபோன்களுக்கு பல வங்கி மற்றும் பரிமாற்றச் சலுகைகள் கொடுக்கப்படுவதால் விலை கணிசமாகக் குறைகிறது.


99% தள்ளுபடி 


எவ்வளவு தான் விலை குறைந்தாலும், லட்சக்கணக்கான விலை மதிப்புள்ள ஐபோன்15 Pro Max 1352 ரூபாய்க்கு விற்கப்பட்டால் யாராவது சும்மா இருப்பார்களா? 99% தள்ளுபடி என்று, ஃப்ளிப்கார்ட் நிறுவனமும் இந்த போனை ஷிப்பிங் செயல்பாட்டில் வைத்துள்ளது. இதனைப் பார்த்த ஒருவர் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸை ரூ.1400க்கும் குறைவான விலையில் கிடைக்கும் என்று ஆசைபப்ட்டு ஆர்டர் போட்டுவிட்டு, கனவு காண ஆரம்பித்துவிட்டார்.


மேலும் படிக்க | பிளிப்கார்ட் சலுகை விற்பனை... ஸ்மார்போன்களுக்கு நம்ப முடியாத அளவில் தள்ளுபடிகள்


ஆனால் பாவம், ஃப்ளிப்கார்ட் ஆர்டரை ரத்து செய்தது. இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், பிளிப்கார்ட்டின் இந்த ஏமாற்றுவேலை தொடர்பாக எக்ஸ் வலைதளத்த்தில் ஆதாரத்துடன் பதிவிட்டுள்ளார்.



வைரலான ஃப்ளிப்கார்ட் மோசடி


ஹிமான்ஷு என்ற பயனர் ஒரு ஸ்கிரீன் ஷாட்டை வெளியிட்டார், அதில் போனின் விலை மற்றும் ரத்து செய்யப்பட்ட நிலை தெரிகிறது. ஹலோ ஃப்ளிப்கார்ட், நான் ஐபோனை ஆர்டர் செய்தேன், அதில் 99 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும். ஷிப்பிங் செய்த பிறகு ஆர்டரை ரத்து செய்துவிட்டீர்கள். இதற்கு விலைப் பிழை காரணமாகக் கூறினீர்கள். இதன் லாஜிக் என்ன? நான் புகார் செய்ய வேண்டுமா? என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | சாம்சங் முதல் கூகுள் பிக்ஸல் வரை.... அசத்தலான தள்ளுபடி வழங்கும் Flipkart


இந்தப் பதிவில், ஏமாந்து போனவர், பிளிப்கார்ட் நிறுவனத்தை ‘டேஹ்’ செய்துவிட்டார். எனவே, வேறுவழியில்லாமல் பதிவுக்கு பதில் அளித்த ஃப்ளிப்கார்ட் நிறுவனம், 'ஆர்டரை ரத்து செய்ததால் ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம். உங்கள் பிரச்சனையைத் தீர்ப்போம் என நீங்கள் எங்களை நம்பலாம். உங்கள் Flipkart கணக்கின் தனியுரிமைக்காக தனிப்பட்ட சாட் மூலம் உங்களின் ஆர்டர் ஐடியை எங்களுடன் பகிர்ந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்’ என்று குறிப்பிட்டு தனது கடமையை செய்துவிட்டது.


இதன் எதிரொலியாக பதிவிட்டவருக்கு ஐபோன் 15 குறைந்தவிலையில் கிடைக்குமா என்பது தெரியாது. ஆனால், உண்மையில் ஃப்ளிப்கார்ட்டில் போனின் விலை ரூ.1,34,900 என மாற்றப்பட்டுள்ளது. இந்த ஃபோனில் 6.7 இன்ச் எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே, 48எம்பி+12எம்பி+12எம்பி கேமரா மற்றும் 12எம்பி முன்பக்க கேமரா உள்ளது. A17 Pro சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | வாட்ஸ்அப் வெறும் செய்தி அனுப்பும் செயலி மட்டுமா? மொபைலுடன் ஒன்றிவிட்ட whatsapp அம்சங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ