வெறும் 9000 ரூபாயில் 5ஜி ஸ்மார்ட்போனா? அசத்தும் VIVO!
விவோ நிறுவனம் தனது புதிய 5ஜி ஸ்மார்ட்போனை வெறும் ரூ.10,000க்குள் விறபனைக்கு கொண்டு வந்துள்ளது.
இந்திய சந்தையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பலவித சிறப்பம்சங்களுடன் களமிறங்கி வருகிறது. சந்தையில் எப்போதும் ஸ்மார்ட்போன்களுக்கு இடையே கடுமையான போட்டிகள் நிலவி வருகிறது, இந்நிலையில் விவோ நிறுவனம் தனது புதிய 5ஜி ஸ்மார்ட்போனை வெறும் ரூ.10,000க்குள் விறபனைக்கு கொண்டு வந்துள்ளது. சமீபத்தில் தான் விவோ நிறுவனம் தனது விவோ Y01 ஸ்மார்ட்போனை ஆப்பிரிக்காவில் அறிமுகப்படுத்தி, அங்கு மாபெரும் வெற்றி கண்டது. இப்போது அந்நிறுவனம் மற்ற நிறுவங்களுக்கு போட்டியாக தனது ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் இந்திய சந்தையில் வெளியிட திட்டமிட்டுள்ளது.
மேலும் படிக்க | SBI வாடிக்கையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை! ஆன்லைன் தாக்குதல்
விவோ Y01 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் :
1) டிஸ்பிளே & ப்ராசஸர் :
இது 1600 x 720 பிக்சல்கள் சொல்யூஷன் கொண்ட 6.51 இன்ச் டிஸ்ப்ளே ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே கொண்டுள்ளது, இது மீடியா டெக் ஹீலியோ P35 SoC செயலி மற்றும் ஆண்ட்ராய்டு 11 Go வெர்ஷனில் இயங்குகிறது.
2) கேமரா :
இது ஒரு புகைப்பட லென்ஸுடன் 8MP, f/2.0 துளை கேமராவின் ஒற்றை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதன் முன்பக்கத்தில் 5எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது, மேலும் இது முகத்தை அழகுபடுத்தும் பியூட்டி மோடையும் மற்றும் டைம்-லாப்ஸ் மோடையும் கொண்டுள்ளது.
3) வேரியண்ட் :
இதில் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது, இது நேர்த்தியான கருப்பு மற்றும் நீலம் என இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது.
4) பேட்டரி :
இது 10W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் கூடிய 5000 mAh நீக்க முடியாத பேட்டரியுடன் பொருத்தப்பட்டுள்ளது.
5) கனெக்டிவிட்டி :
இது 4ஜி டூயல் சிம் ஆதரவு நெட்வொர்க் இணைப்பைக் கொண்டுள்ளது, இது புளூடூத் v5.0 மற்றும் Wi-Fi 2.4GHz/5GHz Wi-Fi உடன் பொருத்தப்பட்டுள்ளது.
6) விலை :
விவோ Y01 ஸ்மார்ட்போனை விவோ நிறுவனம் வெறும் ரூ.9,000 விலையில் விற்பனை செய்கிறது.
மேலும் படிக்க | ரியல்மியின் புதிய மொபைல் - வெளியான அசத்தல் அப்டேட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ