Vivo ஆண்டு இறுதி விற்பனை: பிரபல ஸ்மார்ட்போன் பிராண்டான விவோவின் புத்தாண்டு விற்பனை தொடங்கிவிட்டது. நேற்று, அதாவது டிசம்பர் 19ஆம் தேதி முதல் விற்பனை தொடங்கியுள்ளது. விவோ வி25 சீரிஸ், விவோ ஒய்75 லைனப் மற்றும் விவோ ஒய்35 ஆகியவற்றில் இந்த விற்பனையில் பல வித சலுகைகள் கிடைக்கின்றன. இந்த விற்பனை டிசம்பர் 31 வரை செயலில் இருக்கும். மேலும் இந்த ஃபோனில் ரூ.2,500 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இந்த சலுகைகளுக்கு பிறகு இந்த போன்களின் விலை எவ்வளவு இருக்கும் என்பது பற்றியும் பிற விவரங்களையும் இந்த பதிவில் தெரிந்துகொள்வோம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Vivo V25 Pro: கேஷ்பேக் சலுகை


விவோவின் நிறம் மாறும் Vivo V25 Pro இரண்டு வகைகளில் வருகிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பகத்தின் விலை ரூ.35,990 ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி சேமிப்பகத்தின் விலை ரூ.39,990 ஆகவும் உள்ளது. இந்த ஃபோனை வாங்க, ஐசிஐசிஐ வங்கி பரிவர்த்தனை மூலம் 2,500 ரூபாய் வரை கேஷ்பேக் கிடைக்கும். 


மேலும் படிக்க | ரூ.17000 மதிப்புள்ள POCO ஸ்மார்ட்போனை வெறும் ரூ.700க்கு வாங்கலாம் 


Vivo V25: கேஷ்பேக் சலுகை


Vivo V25 இன் பின் பேனலும் நிறம் மாறும் தன்மை கொண்டது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு மாறுபாட்டின் விலை ரூ. 27,999 ஆகும். மேலும் 12 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு வகையின் விலை ரூ.31,999 ஆகும். ஐசிஐசிஐ, எஸ்பிஐ கிரெடிட் கார்டு இஎம்ஐ மற்றும் பிற வங்கிகளில் ரூ.2,000 கேஷ்பேக் கிடைக்கும்.



Vivo 5G: ஸ்மார்ட்போன் சலுகைகள்


Vivo Y75 4G மற்றும் Vivo Y75 5G விலை ரூ.20,990 மற்றும் ரூ.21,990 ஆகும். எனினும், இந்த விற்பனையில், ஐசிஐசிஐ வங்கி பரிவர்த்தனைக்கு ரூ.1500 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதேபோல், Vivo Y75 5G மற்றும் Vivo Y35 ஆகியவற்றிலும் ஆயிரம் ரூபாய் கேஷ்பேக் கிடைக்கும்.


மேலும் படிக்க | Flipkart Offer: ரூ.15,000-க்கும் குறைவான விலையில் சூப்பரான ஸ்மார்ட்போன்கள்! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ