Flipkart Sale: Flipkart -ன் பிக் சேவிங் டேஸ் விற்பனையில் பல ஆஃபர்கள் அள்ளி வழங்கப்பட்டிருந்தாலும், அதில் சிறப்பான ஆஃபர் குறித்த தகவலை தான் இங்கு பார்க்க இருக்கிறோம். டிசம்பர் 16 ஆம் தேதி தொடங்கிய பிளிப்கார்ட்டின் பிக் சேவிங் டேஸ் விற்பனை இன்னும் இரண்டு நாட்களில் முடிவடைய இருக்கிறது. இந்த இரண்டு நாட்களுக்குள் சூப்பரான ஆஃபர் இருக்கும் பொருட்களை தேர்ந்தெடுத்து வாங்கிக் கொள்ளுங்கள். இந்த நல்ல வாய்ப்பை தவிற விட்டுவிட வேண்டாம்.
ஸ்மார்ட்போன் வாங்கும் எண்ணம் இருந்தால், 17 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள போகோ மொபைலை வெறும் 700 ரூபாய்க்கு வாங்குவது எப்படி? என்பதையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள். பிளிப்கார்ட்டின் பிக் சேவிங் டேஸ் விற்பனையில் Xiaomi நிறுவனத்தின் மொபைல்களுக்கு கூடுதல் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதுவும் போகோ சீரிஸ் மொபைலைக்கு 29 விழுக்காடு வரை தள்ளுபடி அள்ளி வழங்கப்பட்டுள்ளது. Xiaomi-ன் POCO X4 Pro 5G மொபைலை இந்த தள்ளுபடியில் வெறும் 700 ரூபாய்க்கும் குறைவான விலையில் நீங்கள் வாங்கிச் செல்லலாம்.
மேலும் படிக்க | மிகப்பெரிய தள்ளுபடியில் Realme GT Neo 3T! வெறும் ரூ.11,499-க்கு வாங்கலாம்
கடந்த 10 ஆண்டுகளை திரும்பிப் பார்த்தால் அதிக ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்த நிறுவனங்களில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் சியோமி. இந்த நிறுவனத்தின் தரமான தயாரிப்புகளும், சிறந்த அம்சங்களை கொண்ட மொபைல்களை பட்ஜெட் விலையில் அறிமுகப்படுத்துவதுமே இந்த நிறுவனத்தின் மொபைல்கள் அதிகம் விற்பனையாவதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் பிளிப்கார்ட் ஆஃபரில் குறைவான விலைக்கு வந்திருக்கக்கூடிய POCO X4 Pro 5G மொபைலின் அம்சங்களும் வாடிக்கையாளர்களை வியக்கவைக்கிறது.
POCO X4 Pro சிறப்பம்சம்
POCO X4 Pro 5G 6.67-இன்ச் (16.91 செ.மீ.) சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் 360 ஹெர்ட்ஸ் டச் சாம்லிங் ரேட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது பயன்படுத்த மிகவும் மென்மையானது. மேலும், இந்த ஃபோனில் 64 எம்பி பிரதான கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா-வைட் கேமராவுடன் டிரிபிள் கேமரா அமைப்பு உள்ளது. இது 118 டிகிரி பார்வையை வழங்குகிறது. POCO X4 Pro 5G ஆனது 16 MP செல்பி கேமராவுடன் வருகிறது. இது சரியான தெளிவுடன் பிரமிக்க வைக்கும் செல்ஃபிக்களை எடுக்கிறது.
POCO X4 Pro மீதான சலுகைகள் மற்றும் தள்ளுபடி
ஃபோனின் அசல் விலை 23999. ஆனால் நீங்கள் அதை வெறும் 16999-க்கு இப்போதைய தள்ளுபடியில் பெறலாம். அதாவது 7000 ரூபாய் தள்ளுபடியில் விற்பனையாகிறது. இந்த அம்சங்களைக் கொண்ட ஸ்மார்ட்போனைப் இவ்வளவு தள்ளுபடி விலையில் பெறுவது மிகவும் கடினம். வங்கிச் சலுகைகளுக்கு விண்ணப்பித்தால் கூடுதல் தள்ளுபடியைப் பெறலாம். SBI டெபிட் கார்டைப் பயன்படுத்தினால் 1,000 தள்ளுபடி கூடுதலாக கிடைக்கும். Flipkart Axis வங்கி அட்டையில் 5% கேஷ்பேக் பெற முடியும். இதுதவிர எக்ஸ்சேஞ்ச் போனஸூம் இருக்கிறது. உங்கள் பழைய போனை எக்ஸ்சேஞ்சில் போட்டு, அதன் முழு பலனையும் நீங்கள் பெற்றால் வெறும் 699 ரூபாய்க்கு POCO X4 Pro மொபைல் வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம்.
மேலும் படிக்க | Flipkart Offer: ரூ.15,000-க்கும் குறைவான விலையில் சூப்பரான ஸ்மார்ட்போன்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ