வோடபோன்-ஐடியா நிறுவனம் ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய தொலைத்தொடர்பு நீறுவனங்களுக்கு போட்டியாக தனது வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவையை வழங்க போராடி வருகிறது. வோடபோன்-ஐடியா நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவையை வெளியிடுவதில் சவால்களை எதிர்கொண்டுவரும் நிலையில், தற்போது நிறுவனம் இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியது.  இந்த இரண்டு திட்டங்களின் விலைகள் முறையே ரூ.289 மற்றும் ரூ.429 ஆகும்.  வோடோபோனின் இந்த இரண்டு புதிய ரீசார்ஜ் திட்டங்களும் இப்போது Vi ஸ்டோர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட Vi சில்லறை விற்பனை நிலையங்களில் கிடைக்கிறது.  இந்த இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களும் வோடபோனின் ட்ரூலி அன்லிமிடெட் வகையின் கீழ் தொடங்கப்பட்டுள்ளன, அதாவது இந்த திட்டங்கள் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் குரல் அழைப்புகளை வழங்குகின்றன.  புதிய வோடபோன் திட்டங்கள் 78 நாட்கள் வேலிடிட்டியுடன் 6ஜிபி வரை டேட்டா, 1,000 எஸ்எம்எஸ் போன்றவற்றை வழங்குகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ரூ.500-க்குள் கிடைக்கும் ஜியோவின் சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள்!


வோடபோன் ரூ 289 திட்டம்: இந்த திட்டம் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் அழைப்புகளை வழங்குகிறது, இது வோடபோனின் ட்ரூலி அன்லிமிடெட் வகையின் கீழ் வருகிறது.  இந்த திட்டம் 48 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது, இதில் உங்களுக்கு 600 எஸ்எம்எஸ் நன்மைகள், 4ஜிபி டேட்டா மற்றும் டேட்டா பயன்பாட்டிற்கு லிமிட் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.  அதாவது இந்தத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் பயனர்கள் 48 நாட்களுக்கு 4ஜிபி டேட்டாவைப் பெறுவார்கள்.


வோடபோன் ரூ.429 திட்டம்: இந்த திட்டம் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் அழைப்புகள், 6 ஜிபி டேட்டா மற்றும் 1,000 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது.  இந்த திட்டம் 78 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது, இந்தத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் பயனர்கள் 78 நாட்களுக்கு 6 ஜிபி டேட்டாவைப் பெறுவார்கள்.



வோடோபோனை போன்றே ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இதே விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகின்றன.  வோடோபோனின் ரூ.289 திட்டத்திற்கு போட்டியாக, ஏர்டெல் மற்றும் ஜியோ ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகின்றன.  ஏர்டெல்லின் ரூ.299 திட்டமானது 28 நாட்கள் வேலிடிட்டியுடன் அன்லிமிடெட் அழைப்பு, ஒரு நாளைக்கு 1.5ஜிபி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது.  மேலும் இந்தத் திட்டம் மூன்று மாதங்களுக்கு அப்பல்லோ 24/7 மற்றும் பாஸ்டேக்கில் ரூ.100 கேஷ்பேக் வழங்குகிறது.  ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் அன்லிமிடெட் அழைப்புகள், ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது.  மேலும் இந்தத் திட்டம் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ க்ளவுட் போன்றவற்றிற்கான அணுகலை வழங்குகிறது.


மேலும் படிக்க | எலான் மஸ்க் சொல்வதில் நியாயம் இருக்கு: சாட்ஜிபிடி இணை நிறுவனர் ஒப்புதல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ