அசத்தலான சலுகைகளுடன் அறிமுகம் செய்யப்பட்ட வோடபோன் ஐடியா ரூ.299 திட்டம்!
தொலைத் தொடர்பு நிறுவனமான வோடபோன்-ஐடியா அதாவது Vi (Vodafone-Idea) அதன் பயனர்களுக்காக ஒரு புதிய போஸ்ட்பெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
புது டெல்லி: தொலைத் தொடர்பு நிறுவனமான வோடபோன்-ஐடியா அதாவது Vi (Vodafone-Idea) அதன் பயனர்களுக்காக ஒரு புதிய போஸ்ட்பெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. நிறுவனம் பணிபுரியும் நிபுணர்களுக்காக இந்த சிறப்புத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இந்த திட்டதில் பல கூடுதல் நன்மைகள் கிடைக்கின்றன. Vi இன் எளிய போஸ்ட்பெய்ட் திட்டத்தின் விலை மாதம் ரூ .99 முதல் தொடங்குகிறது, Vi Business Plus postpaid Plan ஆரம்ப விலை ரூ .299 ஆகும்.
Vi ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்
Vi (Vodafone Idea) ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஒரு நாளைக்கு 4 ஜிபி டேட்டாவுடன் வருகிறது. மேலும், வேறு எந்த டெலிகாம் ஆபரேட்டரும் இதுபோன்ற சலுகை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ப்ரீபெய்ட் திட்டம் 2 ஜிபி டேட்டாவை மட்டுமே வழங்குகிறது. ஆனால், இதில் இரட்டை டேட்டா உள்ளது, அதாவது இந்த திட்டத்துடன் நீங்கள் 4 ஜிபி டேட்டாவைப் பெறுவீர்கள். பயனர்கள் உண்மையிலேயே அன்லிமிடெட் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் வி மூவிகள் மற்றும் டிவி கிளாசிக் ஆகியவற்றிற்கான இலவச அணுகலைப் பெறுகிறார்கள்.
ALSO READ | Jio, Airtel, VI வரம்பற்ற அழைப்புடன் பம்பர் தரவுகளின் சிறந்த ரீசார்ஜ் திட்டம்
Vi ரூ.109 ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோன் ஐடியா ரூ.109 திட்டம் ஆனது 1ஜிபி டேட்டா, 300 எஸ்எம்எஸ், கால் அழைப்பு நன்மைகளை 20 நாட்கள் வழங்குகிறது. குறிப்பாக கால் அழைப்பு நன்மைகளை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு இந்த புதிய திட்டம் பயனுள்ள வகையில் இருக்கும் என்றே கூறலாம்.
Vi ரூ.99 ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோன் ஐடியா ரூ.99 திட்டத்தை தேர்வு செய்யும் பயனர்களுக்கும் வரம்பற்ற கால் அழைப்பு, 1ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரூ.99 திட்டத்தின் வேலிடிட்டி 18 நாட்கள் ஆகும்.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR