Vodafone Idea (Vi) நிறுவனம் 4G டேட்டா வவுச்சரை வெறும் 19 ரூபாய்க்கு வழங்குகிறது. இன்று Vi நிறுவனம் வழங்கும்  மிகவும் மலிவான டேட்டா வவுச்சர் இதுவாகும். Vi இன் சிறந்த போட்டியாளரான ரிலையன்ஸ் ஜியோ அதன் எண்ட்ரி லெவல் 4G டேட்டா வவுச்சரை ரூ.15க்கு வழங்குகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இரண்டு தொலைத்தொடர்பு நிறுவனங்களும் அவற்றின் எண்ட்ரி லெவல் 4G டேட்டா வவுச்சர்களுடன் 1GB டேட்டாவை வழங்குகின்றன. ஆனால் இரண்டிற்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது. Vi  நிறுவனத்தில் ரூ.19 4G டேட்டா வவுச்சர் 1 நாள் மட்டுமே செல்லுபடியாகும். இருப்பினும், ஜியோவின் ரூ.15 டேட்டா பேக்கின் செல்லுபடியாகும் காலமும் பயனரின் அடிப்படை ஆக்டிவ் திட்டமும் ஒரே அளவில் தான் இருக்கும். Vi க்கான பிற தரவு வவுச்சர்களைப் பார்ப்போம்...


வோடபோன் ஐடியாவின் சிறந்த டேட்டா பிளான்கள்


Vodafone Idea மொத்தம் ஏழு 4G டேட்டா வவுச்சர்களை வழங்குகிறது, இதில் ரூ.19 பேக்கும் அடங்கும். ரூ.100க்கு கீழான நிலையில்  ரூ.48, ரூ.58 மற்றும் ரூ.98 ஆகிய மூன்று திட்டங்களைக் கொண்டுள்ளது. ரூ.48 திட்டத்தில் பயனர்களுக்கு 21 நாட்களுக்கு 2ஜிபி டேட்டா கிடைக்கும். ரூ.58 மற்றும் ரூ.98 மதிப்புள்ள 4ஜி டேட்டா வவுச்சர்கள் மூலம் பயனர்கள் முறையே 28 நாட்கள் மற்றும் 21 நாட்களுக்கு 3ஜிபி மற்றும் 9ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள். ரூ. 58 வவுச்சர், Vi இன் ரூ. 100 என்ற கட்டனத்திற்கு கீழ் உள்ள அனைத்து 4G டேட்டா வவுச்சர்களிலும் மிக நீண்ட செல்லுபடியாகும் காலத்தை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | அதிரடி சலுகை! OPPO 5G ஸ்மார்ட்போனை வெறும் 3000 ரூபாய்க்கு வாங்கலாம்!


பிற மூன்று வவுச்சர்கள், ரூ.118, ரூ.298 மற்றும் ரூ.418 ஆகிய கட்டணத்தில் வருகின்றன. ரூ.118 மதிப்புள்ள வவுச்சர்கள் 28 நாட்களுக்கு 12ஜிபி டேட்டாவுடன் கிடைக்கும். கடைசியாக, ரூ.298 மற்றும் ரூ.418 மதிப்பிலான வவுச்சர்கள், வீட்டிலிருந்து வேலை செய்பவர்களுக்கு என்றஏ பிரத்யேகமாக நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.


ரூ.298 மதிப்புள்ள Vodafone Idea வவுச்சர்


ரூ.298 திட்டத்தில், பயனர்கள் 28 நாட்களுக்கு 50ஜிபி டேட்டாவையும், ரூ.418 வவுச்சருடன் 56 நாட்களுக்கு 100ஜிபி டேட்டாவையும் பெறுவார்கள். இந்த 4G டேட்டா வவுச்சர்கள் அனைத்தும் Vodafone Idea (Vi) மூலம் இந்தியா முழுவதும் வசிக்கும் 4G வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் வழங்கும் இதுபோன்ற பல திட்டங்கள் உள்ளன, அதன் விவரங்களை சம்பந்தப்பட்ட மொபைல் செயலி அல்லது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் சரிபார்க்கலாம்.


மேலும் படிக்க | Jio-Airtel-Vi-க்கு தலைவலியை கொடுக்கும் மலிவான BSNL ப்ரீபெய்ட் திட்டம்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR