புதுடெல்லி: WhatsApp இப்போது நம் வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டது. நமது அன்றாட வேலைகள் முதல் அலுவலக வேலை என அனைத்துவிதமான தகவல் பரிமாற்றங்களுக்கும் WhatsApp என்ற சமூக ஊடக செயலி இன்றியமையதாதிவிட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

WhatsApp வெளியிட்டுள்ள அறிவிப்பு அனைவருக்கும் மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.   மிக விரைவில் நீங்கள் ஒரே நேரத்தில் நான்கு gadgetகளில் வாட்ஸ்அப்பை இயக்க முடியும். இந்த நான்கு சாதனங்களிலும் மீண்டும் மீண்டும் உள்நுழைய வேண்டிய அவசியமில்லை என்பது இதன் தனிச்சிறப்பு...


வாட்ஸ்அப் அறிவித்துள்ளதன்படி, இந்த புதிய அம்சத்தில் வாட்ஸ்அப் ஈடுபட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் இந்த சூப்பர் அம்சத்தின் பயன், WhatsApp பயனர்களுக்கு ஒரே நேரத்தில் நான்கு சாதனங்களில் குறைக்க முடியும். What a App! WhatsApp... என்று அனைவரின் வாயையும் பிளக்க வைத்திருக்கும் இந்த புதிய அம்சம் விரைவில் உங்களுக்காக களம் இறங்கிவிடும்.


இதனால், மொபைல் அல்லது டெஸ்க்டாப் கணினியில் ஒரே நேரத்தில் வேலை செய்யலாம்.   வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பயன்பாட்டில் ஒரு புதிய interface ஒன்றை உருவாக்குகிறது, இதன் மூலம் இந்த அம்சத்தை செயல்படுத்த முடியும் என்று wabetainfo தகவல் தெரிவிக்கிறது.


கடந்த பல மாதங்களாக வாட்ஸ்அப் இந்த திட்டத்தில் ஈடுபட்டுள்ளது.  பல்வேறு சாதனங்களை ஒன்றிணைக்க ஒரு புதிய அமைப்பும் தயாரிக்கப்படுகிறது. இந்த அம்சத்தை அறிமுகப்படுத்திய பிறகு, பயனர்கள் தங்கள் முக்கிய சாதனத்திலிருந்து மற்ற எல்லா சாதனங்களையும் கட்டுப்படுத்த முடியும். மேலும், உங்கள் சாதனங்களில் எதையும் இணைக்கவோ அல்லது இணைப்பை அகற்றவோ முடியும்.


Also Read | ஏர்டெல் Vs ஜியோ Vs வோடபோன்: 84 நாட்கள் ரீசார்ஜ் திட்டத்தில் சிறந்தது எது..!