ஐபோன் 15-ல் இருக்கும் 4 அம்சங்கள்..! வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி
ஐபோன் 15-ல் இருக்கும் 4 அம்சங்கள் வாடிக்கையாளர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தப்போகிறது. இந்த மொபைலின் அம்சங்கள் லீக்காகி இருப்பதால் மொபைல் மார்கெட்டும் சற்று ஆடித்தான் போயிருக்கிறது.
iPhone 15 Launch: ஆப்பிள் ஐபோன் 15 இன்னும் உலகின் எங்கும் அறிமுகப்படுத்தப்படவில்லை. ஆனால் இந்த மாடல் வருவதற்கு முன்பே மிகப்பெரிய மார்க்கெட்டை தயார் செய்து வைத்திருக்கிறது. காரணம், இந்த மொபைலில் இருக்கும் புதிய அம்சங்கள் மற்றும் அது குறித்து இதுவரை லீக்காகியிருக்கும் தகவல்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆப்பிள் நிறுவனத்தைப் பொறுத்தவரை எப்போது ஒரு ஐபோனை அறிமுகப்படுத்தினாலும், புதிய மாடல் மற்றும் அம்சங்களை அந்த மொபைலில் சேர்த்திருக்கும். அதுபோலவே இந்த மொபைலிலும் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
இதற்கு முன்பு வெளியான ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14 தொடர் மிகுந்த எதிர்பார்ப்புடன் அறிமுகப்படுத்தியது. ஆனால், அதற்கு இருந்த எதிர்பார்ப்பை அந்த மொபைல் பூர்த்தி செய்யவில்லை. மாறாக, ஐபோன் 13 தொடரின் மாடல்கள் மொபைல் மார்க்கெட்டில் அதிகமாக வாங்கப்பட்டன. ஏனென்றால் 13 தொடர்களுக்கும் 14 தொடர்களுக்கும் அதிக வித்தியாசம் இல்லை. அதனால், ஐபோன் 15 தொடரில் சில அற்புதமான அம்சங்களைச் ஆப்பிள் நிறுவனம் சேர்த்திருக்கிறது. அது என்னென்ன அம்சங்கள் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | மின் கட்டணத்தை பாதியாக குறைக்கலாம்..! சுலபமான வழியை தெரிந்து கொள்ளுங்கள்
டைட்டானியம் அமைப்பு
இந்த முறை மெட்டாலிக் பாடியை அப்கிரேட் செய்ய நிறுவனம் தயாராகி வருகிறது. அது பெரிய மாற்றமாக இருக்கும். அதாவது, டைட்டானியத்தால் ஆப்பிள் பாடி செய்யப்பட்டிருக்கும். இது குறித்து உறுதியான தகவல்கள் இல்லை என்றாலும், இதுவரை வெளியாகியிருக்கும் தகவல்கள் கூறுகின்றன.
பேட்டரி மீது கவனம்
இந்த முறை நிறுவனம் சிறந்த பேட்டரி பேக்கப் மற்றும் செயல்திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. பயனர்கள் ஸ்மார்ட் போன்களை மீண்டும் மீண்டும் சார்ஜ் செய்யும் தொந்தரவிலிருந்து விடுபடுவார்கள் என்று நம்பப்படுகிறது.
டிஸ்பிளே இன்னும் சூப்பராக இருக்கும்
ஆப்பிள் தனது ஐபோன் 15-ல் காட்சிகள் சூப்பராக இருக்கும் வகையில் டிஸ்பிளேவை வடிவமைக்கிறது. அதாவது, மென்மையாக இருப்பது மட்டுமல்லாமல் சிறந்த செயல்திறனையும் காணும் வகையில் ஐபோன் இருக்கும். இன்னொரு அம்சம் என்னவென்றால், இந்த அம்சம் பயனரின் அனுபவத்தை மேலும் மேம்படுத்தும் வகையில், வால்யூம் பட்டனை அழுத்தினால், பயனர்கள் ஒரு ஹாப்டிக் அதிர்வை உணருவார்கள். இது மிகவும் வலுவாக இருக்கும். இந்த 4 அம்சங்களும் வாடிக்கையாளருக்கு புதிய அனுபவத்தை ஐபோன் 15-ல் கிடைக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ