இந்தியாவில் ஓவ்வொரு தேர்தலின் போதும் EVM என்பது பேசு பொருளாகிறது. ஜெயித்தால் ஜனநாயகம் வென்றது என்றும் தோற்றால், வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியில்லை என குறை கூறுவது வாடிக்கையாகிவிட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வாக்குசீட்டு முறையில் தேர்தல் நடந்த காலத்தில்  நிலவரத்தை அறிய 4-5 நாட்கள் காத்திருக்க வேண்டும். அராஜக போக்கு கொண்ட கட்சிகள் வாக்குச் சாவடிகளை கைப்பற்றி, மொத்தமாக தாங்களே வாக்குகளை செலுத்திக் கொண்ட சம்பவங்கள் எல்லாம் அரங்கேறியுள்ளன.


வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு (EVM) மாறிய பின், காட்சிகள் மாறின. இப்போது வாக்கு எண்ணிக்கை தொடங்கிய 2-3 மணி நேரங்களிலேயே நிலவரம் தெரிந்து விடுகிறது. மாலைக்குள் முடிவுகளே வந்து விடுகின்றன. மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட வளர்ந்த நாடான அமெரிக்காவே இதில் திணறுவதை பார்த்தோம். ஆனால், இந்தியாவில், தேர்தல் ஆணையம் (ECI) இதனை சாத்திய மாக்கியுள்ளது. 


மின்னணு வாக்குபதிவு இயந்திரஙக்ள் என்பது,  ஸ்டாண்ட் அலோன் மெஷின் (Stand Alone Machine, அதாவது கால்குலேட்டரை போல், இதனை எதனுடனும், எதன் மூலமாகவும் இணைக்க முடியாத ஒரு கருவி.  இந்த கருவியை, வைஃபை (WiFi) , ப்ளூடூத் (Bluetooth) போன்றவற்றின் மூலம் ஹேக் செய்ய முடியாதபடி, தொழில்நுட்ப ரீதியாக, மிக வலுவான  பாதுகாப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.  இதனை ஹேக் செய்வது என்பது இயலாத காரியம். 


ALSO READ | தமிழகத் தேர்தல் முடிவுகள்: கோட்டையை பிடிப்பது யார்? கோட்டை விடுவது யார்?

அது மட்டுமல்லாமல், VVPAT எனப்படும் வோட்டர் வெரிபயபிள் பேப்பர் ஆடிட் ட்ரைல் (Voter Verifiable Paper Audit Trail)  என்ற இயந்திரங்கள் மூலம் வாக்காளர்கள் தாங்கள் வாக்களித்த வேட்பாளருக்கு தான் தங்களது வாக்கு பதிவாகியுள்ளதா என்பதை சரிபார்க்க முடியும். இதில் சேகரிக்கப்படும் ஒப்புகை சீட்டுகளை எண்ணி , அந்த குறிப்பிட்ட வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளையும் கணக்கிட்டு, இரண்டும் சரியாக உள்ள என்பதை உறுதி படுத்திக் கொள்ள முடியும்.


2019 தேர்தலுக்கு பிறகு, சில தொகுதிகளை ஆங்காங்கே ராண்டமாக தேர்ந்தெடுத்து, தேர்தல் ஆணையம் எண்ணிப் பார்த்ததில் வாக்கு எண்ணிக்கை மிக துல்லியமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும், கடுமையான வழிமுறைகளையும் விதிகளையும் பின்பற்றி, போட்டியிடும் வேட்பாளர்களின் உரிமையை பாதுகாக்க  இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கிறது. 


ALSO READ | நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் என அதிமுக நம்பிக்கை

வாக்கு பதிவு முடிந்த பின், பூத் ஏஜென்டுகள் முன்னில்லையில்,  EVM பாதுகாப்பாக மூடி சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு சேர்க்கப்படுகின்றன. 


தேர்தலில் (Election) போட்டியிடும் வேட்பாளர்கள் சார்பாக, 24 மணி நேரமும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, எந்த தவறும் நடைபெறவில்லை என உறுதிபடுத்தப்படும்.


பின் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்று பூத் ஏஜெண்டுகள் முன்னிலையில்,  சீல் திறக்கப்படும். 


அதோடு, வாக்கு எண்ணிக்கை நடை பெறும் இடங்களுக்கு தொகுதியில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களின் ஏஜெண்டுகளுக்கும் ஒவ்வொரு டேபுளுக்கும் செல்ல அனுமதியுண்டு. எனவே முறைகேடு நடைபெற வாய்ப்பு ஏதும் இல்லை.


இதிலிருந்து, வாக்குப்பதிவு இயந்திரங்களை குற்றம் சாட்டுவது வெறும் அரசியல் மட்டுமே என்பது தெளிவாகிறது.


ALSO READ | அமோக வெற்றி பெற்று கோட்டையை பிடிக்கிறது திமுக: கருத்துக்கணிப்புகளில் clean sweep


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR