வாட்ஸ் அப் (WhatsApp) என்பது கிட்டத்தட்ட அனைவரும் பயன்படுத்தி வரும் ஒரு செயலி ஆகும். உலகம் முழுவதும் பல பில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டு செயல்பட்டு வரும் சமூக வலைத்தள செயலியான வாட்சப்பில் சில புதிய வசதிகள் விரைவில் வர உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவை என்னவென்று பார்ப்போம்...!!


ஃபிங்கர் பிரின்ட் சென்சார் (Finger Print Censor)


ஸ்மார்ட்போன்களில் கொடுக்கப்படும் "ஃபிங்கர் பிரின்ட் சென்சார்" விரைவில் பயனாளர்களுக்கு வழங்க உள்ளது. கின்றன. 


அடுத்தடுத்து அனுப்பப்படும் தகவல் (Frequently Forwarded)


சமூக வலைத்தளமான வாட்சப், பேஸ்புக் போன்ற செயலிகளில் இவன் திருடன், இவன் கொலைகாரன், இவனிடம் எச்சரிக்கையாக இருங்கள், முடிந்தளவு அதிகம் பகிருங்கள் என்று வதந்திகளை பரப்பி வருகின்றனர். இதனை நம்பி மக்களும் கொலைகாரன், திருடன் என்று பழி சுமத்தப்பட்ட அப்பாவி மனிதர்களை அடித்து கொன்று விடுகின்றனர். போலி செய்திகளைப் பரப்புவதில் இத்தகைய ஃபார்வர்டு மெசேஜ்களுக்குப் பெரிய பங்குண்டு. இது போன்ற போலி செய்திகள் அதிகரித்து கொண்டே வருவதால், இதனை தடுக்க தக்க நடவடிக்கை எடுக்குமாறு வாட்சப் நிறுவனத்திற்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து நான்கு தடவைக்கு மேல் ஒரு மெசேஜை அனுப்பும்போது அது அடிக்கடி ஃபார்வர்டு செய்யப்படுகிறது என்பதை மற்றவர்களுக்குத் தெரிவிக்கும் வகையில் "Frequently Forwarded"என்ற வார்த்தை அதில் சேர்க்கப்படும். இதனால் அந்த மெசேஜைப் பெறுபவர் அதை மற்றவர்களுக்கு அனுப்புவது குறையும்.



கியூ.ஆர்.கோடு (Quick Response Code)


வாட்ஸ் அப் செயலியில் தனியாக QR code ஸ்கேன் செய்வதற்கான வசதி கொடுக்கப்படவுள்ளது. இதன் மூலமாக ஒருவருடைய தொடர்பு எண்ணை ஸ்கேன் செய்வதன் மூலமாக வாட்ஸ்அப்பில் சேர்த்துக்கொள்ள முடியும். 


புதிய வாட்ஸ்அப் அம்சம் நேரத்தை மிச்சப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பயனருக்கான சேமிப்புக்கான இடத்தையும் மிச்சப்படுத்தும்.