வாட்ஸ்அப் உலகின் மிகவும் பிரபலமான இன்ஸ்டண்ட் மெசேஜிங் ஆப் ஆகும். இது 2 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப நிறுவனம் அவ்வப்போது அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், பயனர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரிப்போர்ட் ஸ்டேட்டஸ் அப்டேட்  ஆப்ஷனை கொண்டு வந்துள்ளது. இந்த புதிய அம்சம் பயனர்களுக்கு ஆண்ட்ராய்டு பீட்டாவில் ஸ்டேட்டஸ் அப்டேட்  ரிப்போர்ட் செய்யும் வசதியை வழங்கும். Wabetainfo அறிக்கையின்படி, பீட்டா சோதனையாளர்கள் ஸ்டேட்டஸ் விருப்பங்களுக்குள் புதிய 'ரிப்போர்ட்' ஆக்ஷனனை காண்பார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வாட்ஸ்அப்பின் புதிய அம்சம்
புதிய அம்சத்தின் மூலம், சேவை விதிமுறைகளை மீறக்கூடிய எந்தவொரு ஸ்டேட்டஸ் அப்டேட்டையும் பயனர்கள் ரிப்போர்ட் செய்யலாம். இது பின்னர் நிறுவனத்தின் நடுநிலைக் குழுவிற்கு அனுப்பப்படும். அதுமட்டுமில்லாமல், செய்திகள், மீடியா, இருப்பிடப் பகிர்வு, அழைப்புகள் மற்றும் நிலை புதுப்பிப்புகள் எல்லா சாதனங்களிலும் என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் மூலம் பாதுகாக்கப்படுவதை இந்த அம்சம் உறுதி செய்கிறது.


மேலும் படிக்க | சாட்ஜிபிடி-க்கு போட்டியாக எலான் மஸ்க் உருவாக்கும் புதிய ஏஐ - நாளுக்கு நாள் எகிறும் போட்டி 


அதாவது வாட்ஸ்அப், மெட்டா மற்றும் ப்ராக்ஸி வழங்குநர்கள் கூட இல்லாமல் வேறு யாரும் பயனர்களின் தனிப்பட்ட செய்திகளைப் படிக்கவும் அவர்களின் தனிப்பட்ட அழைப்புகளைக் கேட்கவும் முடியாது.


பயனர்களை பாதுகாப்பாக வைத்திருக்கும்
இந்த நிலையில் இந்த புதிய அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், ஏனெனில் இது அனைத்து பயனர்களுக்கும் தளத்தை பாதுகாப்பானதாக மாற்றும். ப்ளே ஸ்டோரில் ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப் பீட்டாவின் சமீபத்திய அப்டேட்டை நிறுவிய பிறகு, சில பீட்டா சோதனையாளர்களுக்கு ஸ்டேட்டஸ் அப்டேட்களைப் ரிப்போர்ட் அளிக்கும் திறன் கிடைக்கும் என்றும், வரும் நாட்களில் அதிகமான பயனர்களுக்கு வெளியிடப்படும் என்றும் அறிக்கை கூறுகிறது. இதனிடையே கடந்த ஜனவரி மாதம் ஆண்ட்ராய்டு பீட்டாவிற்கான இந்த அம்சத்தில் செய்தியிடல் இயங்குதளம் செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டது.


மேலும் படிக்க | வெறும் ரூ.399க்கு ரீசார்ஜ் திட்டம், இலவச OTT..ஜியோ அசத்தல் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ