வெறும் ரூ.399க்கு ரீசார்ஜ் திட்டம், இலவச OTT..ஜியோ அசத்தல்

Jio Postpaid: ஜியோவின் போஸ்ட்பெய்டு ரீசார்ஜ் திட்டத்தில் அபரிமிதமான சலுகைகள் வழங்கப்படுகின்றன, இருப்பினும் இந்த ரீசார்ஜில் பல நன்மைகள் உள்ளன, அவை என்ன என்பதை தெரிந்துக்கொள்வோம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 1, 2023, 02:27 PM IST
  • ரீசார்ஜ் திட்டத்தின விலை ரூ.,399 ஆகும்.
  • 1 மாத வேலிடிட்டி கிடைக்கும்..
  • மொத்தம் 75 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
வெறும் ரூ.399க்கு ரீசார்ஜ் திட்டம், இலவச OTT..ஜியோ அசத்தல் title=

ஜியோ ரீசார்ஜ் சலுகை: ஜியோவின் போஸ்ட்பெய்ட் ரீசார்ஜ் சலுகையில், ப்ரீபெய்ட் திட்டங்களில் கிடைக்காத பல நன்மைகளை வாடிக்கையாளர்கள் பெறுகிறார்கள். போஸ்ட்பெய்டு ரீசார்ஜ்கள் விலை அதிகம் என்று மக்கள் நினைக்கிறார்கள், அதனால்தான் பெரும்பாலான மக்கள் ப்ரீபெய்ட் திட்டங்களை விரும்புகிறார்கள். அந்த வகையில் நீங்கள் ஒரு புதிய போஸ்ட்பெய்ட் திட்டத்தை வாங்க விரும்பினால், இன்று நாங்கள் உங்களுக்கு ஜியோவின் போஸ்ட்பெய்ட் திட்டத்தைப் பற்றி தெரிவிக்க உள்ளோம். எனவே இந்த ரீசார்ஜ் திட்டம் எது, அதில் என்ன சலுகை உள்ளது என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.

இந்த ரீசார்ஜ் திட்டம் எதுவாகும்
இன்று நாம் காண உள்ள ரீசார்ஜ் திட்டத்தின விலை ரூ.,399 ஆகும். இது நிறுவனத்தின் மலிவான போஸ்ட்பெய்ட் ரீசார்ஜ் திட்டமாகும், இதில் நீங்கள் சாதாரண பலன்களைப் பெறுவீர்கள், அத்துடன் நிறுவனம் உங்கள் பொழுதுபோக்கையும் இந்த ரீசார்ஜ் திட்டத்தில் சேர்த்துள்ளது. இந்த திட்டத்தில் முதலில் 1 மாத வேலிடிட்டி கிடைக்கும், தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். இந்த ரீசார்ஜ் திட்டத்தில், உங்களுக்கு மொத்தம் 75 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது, அதை நீங்கள் மாதம் முழுவதும் பயன்படுத்தலாம். இந்த டேட்டா தீர்ந்த பிறகு, பயனர்கள் ஒரு ஜிபிக்கு ரூ.10 அதிகமாகச் செலுத்த வேண்டும்.

மேலும் படிக்க | வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி! BSNL இந்த 4 ரீசார்ஜ் பேக்குகளை அதிரடியாக நீக்கியுள்ளது!

இந்தத் திட்டதில், நாடு முழுவதும் உள்ள அனைத்து நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற குரல் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் கிடைக்கிறது. இதில் கூடுதலாக, OTT நன்மைகளும் கிடைக்கும். இந்த திட்டத்தில் Netflix, Amazon Prime வீடியோ, Disney+ Hotstar ஆகியவற்றுக்கான இலவச அணுகல் கிடைக்கின்றன.  ஜியோவைத் தவிர, போட்டி நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவின் போஸ்ட்பெய்ட் திட்டங்களில் இந்த அம்சம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, ஜியோவின் இந்த திட்டங்கள் வாடிக்கையாளர்களால் பெரிதும் விரும்பப்படுகின்றன.

இந்த திட்டத்தில் நீங்கள் 1 மாதம் முழுவதும் வரம்பற்ற அழைப்பைப் பெறுவீர்கள், இதனுடன் உங்களுக்கு 200 ஜிபி டேட்டா ரோல்ஓவர் வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க | IPL 2023 Free Live Streaming: ஏர்டெல் பயனர்களுக்கு அடிச்சது ஜாக்பட், ஒரே பிளானில் பல நன்மைகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News