புதுடெல்லி: பேஸ்புக்கிற்கு (Facebook) சொந்தமான மெசஞ்சர் செயலி (Messenger) வாட்ஸ்அப் தொடர்ந்து அதன் பயனர்களுக்கு புதிய அம்சங்களை வழங்க முயற்சிக்கிறது. அதன் தொடர்ச்சியாக வாட்ஸ்அப் கடந்த சில மாதங்களாக ஒரு புதிய அம்சத்தை 'காலாவதியான செய்தி' (Expiring Message) சோதித்து வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த புதிய அம்சம் தொடர்பான செய்திகள் இந்த ஆண்டு மார்ச் மாதம் முதன்முதலில் வெளிவந்தன. முன்னரே தீர்மானிக்கப்பட்ட குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு, படங்கள், வீடியோக்கள் மற்றும் GIF படங்கள் போன்ற செய்திகளுடன் அனுப்பப்படும் அனைத்தும் தானாகவே நீக்கப்படும்.


சமீபத்திய WABetaInfo அறிக்கையில், வாட்ஸ்அப் 2.20.201.1 பீட்டா பதிப்பை அண்ட்ராய்டில் (Android) வெளியிட்டுள்ளது. அதோடு, சமீபத்திய வெளியீட்டில் காலாவதியாகும் புதிய மீடியா அம்சத்தைப் பற்றிய அம்சங்களும் அடங்கும். செய்திகள் தானாகவே காலாவதியாகும் அம்சத்தைப் போலவே, இந்த அம்சமும் காலாவதியான மீடியாவை (படங்கள், வீடியோக்கள் மற்றும் GIF கள்) தானாகவே நீக்க அனுமதிக்கும், ஒருவர்  உரையாடலில் (chat) இருந்து வெளியேறிய பின் தானாகவே மறைந்துவிடும்.


Read Also | Google Pay இப்போது tap-to-pay அம்சத்தை ஆதரிக்கும், இதன் பயன் என்ன தெரியுமா?


ஆனால், இதிலுள்ள சிறப்பம் என்னவென்றால், ஊடகங்கள் தானாகவே காணாமல் போன பிறகு 'இந்த மீடியா காலாவதியானது' ('This media is expired') போன்ற செய்தி திரையில் வராது. ஒருவர் உரையாடலில் ஈடுபட்டிருக்கும்போது காலாவதியாகும் ஊடகங்கள் வேறு வழியில் தோன்றும், இதன் மூலம் தேவையற்ற வீடியோக்களும், புகைப்படங்களும் இனிமேல் அனைவருக்கும் தலைவலியாக இருக்காது.