புதுடெல்லி: இந்தியாவில் மிகவும் பிரபலமான டிஜிட்டல் கட்டண செயலிகளில் ஒன்று கூகிள் பே (Google Pay). இப்போது இந்த டிஜிட்டல் கட்டண செயலியில் மற்றொரு புதிய அம்சத்தைக் கூடுதலாகப் பெறலாம். Google Pay இன் டேப்-டு-பே (tap to pay) அம்சம் இப்போது ஆக்சிஸ் வங்கி (Axis Bank) மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின்(State Bank of India) விசா அட்டைகளையும் (VISA cards) ஆதரிக்கும் என்று கூகுள் அறிவித்துள்ளது.
இந்த அம்சம் NFC இயக்கப்பட்ட POS (NFC-enabled POS) உடன் contactless paymentகளுக்குப் பயன்படுத்தப்படலாம். அட்டையின் விவரங்களைப் பகிர்ந்து கொள்ளாமல் டிஜிட்டல் டோக்கன் மூலம் பணம் செலுத்த முடியும் என்பது இதன் சிறப்பம்சம். இந்த புதிய அம்சத்தினால், Google Pay பயனர்கள் 2.5 மில்லியனுக்கும் அதிகமான VISA வணிகர்களிடமிருந்தும், 1.5 மில்லியனுக்கும் அதிகமான Bharat QR இணைப்பு வைத்துள்ள வணிகர்களிடமிருந்தும் contactless payment மூலம் கட்டணங்களை செலுத்த அனுமதிக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த அம்சம் தற்போது ஆக்சிஸ் வங்கி மற்றும் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களின் விசா அட்டை பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது என்றாலும், விரைவில் பிற வங்கிகளும் இதில் இணையலாம்.
Also Read | தனது முதல் ஸ்மார்ட் கண்ணாடியை உருவாக்க Ray-Ban உடன் கூட்டு சேரும் Fb!!
Google Pay & NBU India இந்தியாவின் வணிகத் தலைவர் சஜித் சிவானந்தன் கூறுகையில், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான கட்டண அனுபவத்தை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், டோக்கன்களைப் பயன்படுத்துவதால் மோசடிக்கான வாய்ப்புகள் குறைகிறது. டோக்கன் வசதி வாடிக்கையாளர்களை தற்போதைய நேரத்தில் பாதுகாப்பாக பரிவர்த்தனை செய்ய ஊக்குவிக்கும். மேலும், ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் வணிக பரிவர்த்தனைகளை விரிவுபடுத்தும் என்று நம்புகிறோம்.
எப்படி உபயோகிப்பது?
நீங்கள் இந்த அம்சத்தை பயன்படுத்த விரும்பினால், முதலில் நீங்கள் அட்டை விவரங்களை Google Pay செயலியில் (Google Pay App) சேர்க்க வேண்டும். இதற்குப் பிறகு, அமைப்புகளில் கட்டணம் செலுத்தும் முறைக்கு அட்டை சேர்க்கப்பட வேண்டும். இந்த OTP ஐ உள்ளிட வேண்டியிருக்கும், பின்னர் நீங்கள் அட்டையை பயன்படுத்த முடியும். இதற்குப் பிறகு, என்.எஃப்.சி (NFC) இணைக்கப்பட்ட டெர்மினல்களில் contactless payment செலுத்துவது உங்களுக்கு எளிதாக இருக்கும்.