வாட்ஸ்அப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில் வாட்ஸ்அப் அதன் பயனர்களுக்கு புதுப்புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது.  ஐபோன் மற்றும் iPad உள்ளிட்ட iOS சாதனங்களுக்கான வாட்ஸ்அப்பின் சமீபத்திய புதுப்பிப்பு என்னவென்றால் பயனர்கள் தற்போது சாட் செய்யாமலேயே பின்னணியில் வாய்ஸ் மெசேஜ்களை கேக்க அனுமதிக்கிறது.  இந்த அப்டேட்டின் மூலம்  பயனர்களை சாட் திரைக்கு வெளியே வாய்ஸ் மெசேஜ் மற்றும் ஆடியோ ஃபைல்களை கேக்கலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | ஆண்ட்ராய்டு ஆப்களை விண்டோஸில் பயன்படுத்துவது எப்படி?


இந்த லேட்டஸ்ட் அப்டேட்டானது முதலில் ஆப்பிள் சாதனங்களில் மட்டுமே கிடைக்கவுள்ளது, அடுத்ததாக  இந்த அப்டேட் ஆண்ட்ராய்டு சாதனங்களில் எப்போது கிடைக்கும் என்பது குறித்து எந்த தகவலையும் நிறுவனம் தெரிவிக்கவில்லை.  தற்போது வாட்ஸஅப் அணைத்து சாதனங்களிலும் வாய்ஸ் மெசேஜ் மற்றும் அழைப்புகளை தரமான வகையில் மேம்படுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. 



வாட்ஸ்அப் ஆனது புதிய குளோபல் வாய்ஸ் மெசேஜ் பிளேயர்ஐ iOS இல் மட்டுமே வெளியிட்டுள்ளது.  iOS v22.4.75க்கான வாட்ஸ்அப் ஆனது 'சாட்டிற்கு வெளியே வாய்ஸ் மெசேஜ் மற்றும் ஆடியோ ஃபைல்களை கேக்க பயனர்களை அனுமதிக்கும்.  மேலும் நாம் வேறு ஒருவருடன் சாட் செய்து கொண்டிருக்கும்பொழுது இன்னொருவரிடம் இருந்து வாய்ஸ் மெசேஜ் வந்தால் நாம் வாய்ஸ் மெசேஜ் வந்த சாட்டை திறந்து பார்த்து செய்தியை கேக்க வேண்டிய தேவையில்லை, மாறாக இருக்கும் சாட்டிலேயே வரும் வாய்ஸ் மெசேஜ்களை கேட்டுக்கொள்ளலாம்.  ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, ஆண்ட்ராய்டு மற்றும் டெஸ்க்டாப்/வெப் ஆப்ஸ் பயனர்களுக்கு இந்த அம்சம் எப்போது செயல்படும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை .


சில காலங்களாகவே மெட்டாவுக்குச் சொந்தமான மெசேஜ் சேவையானது  குளோபல் வாய்ஸ் மெசேஜ் பிளேயர்ஐ சோதித்து வருகிறது.  இந்த அம்சம் கடந்த மாதம் முதன்முதலாக பீட்டா பயனாளர்களுக்கு வழங்கப்பட்டது.  வாய்ஸ் மெசேஜ் அனுப்பியது யார் என்பது குறித்து அவரின் பெயருடன் திரையில் தோன்றும், அப்போது இதனை பிளே/பாஸ் செய்யவோ அல்லது முழுமையாக மூடவோ முடியும்.


மேலும் படிக்க | போனில் அதிவேக இணைய சேவை கிடைக்காததற்கு ‘இந்த’ தவறு காரணமாக இருக்கலாம்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR