இனி வாட்ஸ்அப்-யை விண்டோஸ் டெஸ்க்டாப்-பிலும் பயன்படுத்தலாம்!!
விண்டோஸ் இயங்குதள டெஸ்க்டாப் சாதனங்களில் வேலை செய்யும் படி வாட்ஸ்அப் செயலி உருவாக்கப்படுவதாக தகவல்!!
விண்டோஸ் இயங்குதள டெஸ்க்டாப் சாதனங்களில் வேலை செய்யும் படி வாட்ஸ்அப் செயலி உருவாக்கப்படுவதாக தகவல்!!
தற்போது வாட்ஸ்அப் உலகளாவிய ரீதியில் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் உடனடி செய்தி சேவை ஆகும். வாட்ஸ்அப்-ல் தற்போது நிறைய அப்டேட்களை செய்து வருகிறது. இதனால், பயனர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். இதையடுத்து, தற்போது வாட்ஸ்அப் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த இரு நிறுவனங்களும் இணைந்து டெஸ்க்டாப் செயலியை உருவாக்குவதாக கூறப்படுகிறது. வாட்ஸ்அப் விண்டோஸ் போன் செயலியில் சீரான அப்டேட் வழங்கப்படும் நிலையில், விண்டோஸ் சென்ட்ர் வெளியிட்டிருக்கும் தகவல்களில் விரைவில் வாட்ஸ்அப் டெஸ்க்டாப் செயலி விரைவில் வெளியிடப்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
வாட்ஸ்அப்-ஆன யுனிவர்சல் விண்டோஸ் பிளாட்ஃபார்ம் (Universal Windows Platform -UWP) கான்செப்ட் ஆர்ட் முழுமையாக அகற்றப்படும் முன் பெஹான்ஸ் மூலம் லீக் ஆகியுள்ளது. இது UWP வடிவமைப்பு சார்ந்த அக்ரிலிக் டிரான்ஸ்பேரென்சி கொண்ட விண்டோஸ் செயலி போன்று காட்சியளிப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த செயலியை உருவாக்க வாட்ஸ்அப் மற்றும் மைக்ரோசாஃப்ட் இணைந்து தொடர் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வாட்ஸ்அப் டெஸ்க்டாப் செயலி ஒன்று பயன்படுத்தப்படுகிறது. அனால் இது வாட்ஸ்அப் வெப் செயலியாக இயங்கிவருகிறது.
வாட்ஸ்அப் வெப் ஆப் பல்வேறு வசதிகளை வழங்கினாலும், வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் வசதிகளை வழங்கவில்லை. புதிய ((UWP) திட்டத்தின் கீழ் அனைத்து அம்சங்களும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.