WhatsApp ஃபார்வர்டு செய்திகளை 5 முறைமட்டும் பயன்படுத்த அனுமதி!
இனி வாட்ஸ் அப்பில் வரும் வதந்திகள் பரவுவதை தடுக்க வாட்ஸ் அப் நிறுவனத்தை மீண்டும் எச்சரிக்கும் மத்திய அரசு!!
இனி வாட்ஸ் அப்பில் வரும் வதந்திகள் பரவுவதை தடுக்க வாட்ஸ் அப் நிறுவனத்தை மீண்டும் எச்சரிக்கும் மத்திய அரசு!!
இந்தியா முழுவதும், கடந்த சில மாதங்களாக குழந்தை கடத்தல் என்ற வதந்திகளை நம்பி பலபேர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர். சாதாரணமாக யாரவது குழந்தை அருகில் சென்றாலே, அவர்களைக் குழந்தை திருடும் கும்பல் என நினைத்து, ஒரு கூட்டமே சேர்ந்து ஒருவரைத் கொடூரமாக தாக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
வாட்ஸ்அப்பில் பகிரப்பட்டுவரும் வதந்திகளின் மூலமாகவே இது போன்ற சம்பவங்கள் நடைபெற்றுவருகின்றன என மத்திய அரசு முழுமையாக நம்புகிறது. இதனால், அதில் பகிரப்படும் சந்தேகத்திற்குரிய செய்திகள் மற்றும் வதந்திகளைத் தடுக்கவும், நீக்கவும் வேண்டும் எனக் கூறி, வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு சார்பில் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்துவருகிறது.
வாட்ஸ் அப்பில் ஃபார்வர்டு தகவல்கள் என்பதை அறிந்து கொள்ளும் வசதியை ஏற்படுத்துவது தவிர போலி செய்திகளை கட்டுப்படுத்த வேறு என்ன நடவடிக்கைகளை எடுக்கப்போகிறீர்கள் என்றும் வாட்சப் நிறுவனத்திடம் அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இது குறித்து பல்வேறு கேள்விகளுடன் தங்களது 2 வது நோட்டீசை வாட்சப் நிறுவனத்திற்கு அரசு அனுப்பியுள்ளது.
இதைத் தொடர்ந்து ஃபார்வர்டு தகவல் என்பதை காட்டும் வசதி கொண்டு வரப்படும் என அரசிடம் வாட்சப் உறுதியளித்திருந்தது. மேலும் வாட்சப் தகவல்கள் குறித்த விழிப்புணர்வு வழிகாட்டுதல்களையும் முக்கிய செய்தித் தாள்களில் ஒரு பக்க விளம்பரமாக வாட்சப் வெளியிட்டிருந்தது. மேலும், மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், அப்பில் வரும் ஃபார்வர்டு தகவல்களை குறைந்த பட்சம் முறை மட்டுமே மற்றவர்களுக்கு ஃபார்வர்டு செய்வதற்கான உரிமையாழிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.