இந்தியாவுக்கு WhatsApp குறைதீர் அதிகாரியை நியமிக்காதது ஏன்? -SC
வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு இந்தியாவுக்கான குறைதீர் அதிகாரியை நியமிக்காதது குறித்து வாட்ஸ் அப் நிறுவனம் நான்கு வாரத்திற்குள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு....!
வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு இந்தியாவுக்கான குறைதீர் அதிகாரியை நியமிக்காதது குறித்து வாட்ஸ் அப் நிறுவனம் நான்கு வாரத்திற்குள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு....!
இந்தியா முழுவதும், கடந்த சில மாதங்களாக குழந்தை கடத்தல் என்ற வதந்திகளை நம்பி பலபேர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர். சாதாரணமாக யாரவது குழந்தை அருகில் சென்றாலே, அவர்களைக் குழந்தை திருடும் கும்பல் என நினைத்து, ஒரு கூட்டமே சேர்ந்து ஒருவரைத் கொடூரமாக தாக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
வாட்ஸ்அப்பில் பகிரப்பட்டுவரும் வதந்திகளின் மூலமாகவே இது போன்ற சம்பவங்கள் நடைபெற்றுவருகின்றன என மத்திய அரசு முழுமையாக நம்புகிறது. இதனால், அதில் பகிரப்படும் சந்தேகத்திற்குரிய செய்திகள் மற்றும் வதந்திகளைத் தடுக்கவும், நீக்கவும் வேண்டும் எனக் கூறி, வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு சார்பில் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்துவருகிறது.
இந்நிலையில், வாட்ஸ் அப் நிறுவனம் ஏன் இந்தியாவில் குறை தீர்ப்பு அதிகாரியை நியமிக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளது உச்ச நீதிமன்றம். இது குறித்து நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என கோரி வாட்ஸ் நிறுவனம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம், நிதி அமைச்சகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முன்னதாக, கடந்த வாரம் வாட்ஸ் அப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கிறிஸ் டேனியல்ஸ், மத்திய தகவல் தொழில்நுட்ப அதிகாரியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, வாட்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது அலுவலகம் அமைக்க வேண்டும் என்றும் குறை தீர்ப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்றும் ரவிசங்கர் பிரசாத், வாட்ஸ் அப் சிஇஒ விடம் வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது...!