எந்த நிறுவனத்தின் ஃபைபர் திட்டம் மிகவும் மலிவானது? ஏர்டெல் Vs ஜியோ! இல்லை பிஎஸ்என்எல்!
Jio Vs Airtel Vs BSNL: எந்த தொலைதொடர்பு நிறுவனத்தின் ரீசார்ஜ் பிளான் மிகவும் மலிவானது? யாருடையது மலிவான திட்டம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்...
சிறந்த பிராட்பேண்ட் நிறுவனங்களின் பட்டியலில், ஜியோ, ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் ஆகியவை முதலிடத்தில் வருகின்றன. மூன்று தொலைதொடர்பு நிறுவனங்களுமே ஃபைபர் திட்டங்களை செயல்படுத்திவருகின்றன. இந்த மூன்று நிறுவனங்களின் மலிவான ஃபைபர் திட்டங்களைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.. இந்த மூன்றில் எது உங்களுக்கு சிறந்தது என்பதை முடிவு செய்ய உதவியாக இருக்கும்.
அண்மையில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் மொபைல் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தின. இதனால் பலர் பிஎஸ்என்எல் திட்டத்திற்கு மாறினார்கள். தற்போது மக்களின் கவனம் பிஎஸ்என்எல் பக்கம் திரும்பியிருக்கும் நிலையில், நிறுவனமும் கூடிய விரைவில் 4ஜியை கொண்டு வர தயாராகி வருகிறது.
மொபைல் ரீசார்ஜ் திட்டங்கள் விலை உயர்ந்த பிறகு, பிராட்பேண்ட் திட்டங்களின் விலையும் அதிகரிக்கலாம் என்று மக்கள் அஞ்சுகின்றனர். எனவே, இந்த மூன்று நிறுவனங்களின் எதனுடைய ஃபைபர் திட்டம், மலிவானதாக இருக்கிறது என்று தெரிந்துக் கொள்வோம்.
ரூ.399 ஜியோ ஃபைபர் பிளான்
ஜியோவின் ஃபைபர் திட்டத்தில், 399 ரூபாய் பிளான் 30Mbps வேகம் கிடைக்கக்கூடியது. ஜியோவின் இந்தத் திட்டத்தில் வரம்பற்ற டேட்டாவைப் பெறலாம். இது தவிர, இலவச அழைப்பும் உண்டு.
ஏர்டெல் மலிவான ஃபைபர் திட்டம்
ஏர்டெல் ஃபைபர் திட்டம் ரூ.499 ரூபாயில் இருக்கிறது. இந்த திட்டத்தில் 40Mbps வேகம் கிடைக்கும். வரம்பற்ற டேட்டா கொடுக்கும் இந்தத் திட்டம்த்தில் எவ்வளவு வேண்டுமானாலும் போன் செய்துக் கொள்ளலாம். உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகளுக்கு வரம்பே இல்லை. Apollo 24X7 மற்றும் Wynk Music இன் சந்தாவும் திட்டத்தில் கிடைக்கிறது.
BSNL மலிவான ஃபைபர் திட்டம்
பிஎஸ்என்எல் ரூ.329 ஃபைபர் என்ட்ரி திட்டத்தைக் கொண்டுள்ளது. இதில் 25Mbps அளவில்,1000GB வரை வேகம் கிடைக்கும். 1000GB தீர்ந்த பிறகு, வேகம் 4Mbps ஆகிவிடும். இங்கே வரம்பற்ற அளவு தரவு பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இது தவிர, வரம்பற்ற அழைப்பு வசதியும் உள்ளது.
ஜியோவா? ஏர்டெல்லா? பிஎஸ்என்எல்லா? எது மலிவானது?
இப்போது இந்த மூன்று ஃபைபர் பிளான்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால், அரசு தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் திட்டம் முதலிடத்தைப் பெற்றுள்ளது. 329 ரூபாய்க்கு ஃபைபர் திட்டம் கொடுக்கும் பிஎஸ்என்எல் முதலிடத்தைப் பிடித்தால் ஜியோவின் திட்டம் ரூ.399 என்ற அளவில் இரண்டாவது இடத்தையும் பிடிக்கின்றன. ஏர்டெல் 499 ரூபாய் திட்டத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
அன்லிமிடெட் பிளான்
அன்லிமிடெட் திட்டத்தைப் பெற விரும்பினால்ஜியோவின் திட்டம் இங்கே சிறந்ததாக இருக்கும். ஏனெனில் வரம்பற்ற டேட்டா ரூ.399க்கு கிடைக்கிறது என்பதும், அதிலும் இதன் வேகம் 30Mbps என்ற அளவில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ