Xiaomi Mi 11 Ultra: சீன ஸ்மார்ட்போன் பிராண்டான சியோமி தனது முதன்மை Mi 11 தொடரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இதில் Mi 11 Ultra, Mi 11 X மற்றும் Mi 11X Pro ஆகியவை உள்ளன. Mi 11 அல்ட்ரா (5G) ஸ்மார்ட்போனில் உலகின் முதல் டிரிபிள் ப்ரோ-கிரேடு கேமரா உள்ளது (50MP + 48MP + 48MP). மேலும் இதில் வேகமான 67W சார்ஜிங் மற்றும் ஹார்மன் கார்டன் ஸ்பீக்கர்களும் கிடைக்கின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Xiaomi Mi 11 அல்ட்ரா (12 ஜிபி + 256 ஜிபி) காஸ்மிக் பிளாக் மற்றும் காஸ்மிக் ஒயிட் ஆகிய இரண்டு வண்ண வகைகளில் கிடைக்கிறது. இதன் விலை  69,999 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. Mi 11 அல்ட்ராவில் பின்புறத்தில் செகண்டரி 1.1 அங்குல AMOLED டச் டிஸ்பிளேயும் உள்ளது. இது நேரம், தேதி மற்றும் அறிவிப்புகளைக் காண்பிக்க எப்போதும் இயக்கத்தில் இருக்கும் ஒரு டிஸ்பிளேவாக உள்ளது. 


இந்த ஸ்மார்ட்போனில் (Smartphone) முதன்மை குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 மொபைல் சிப் இயக்கத்தில் உள்ளது. குவாட் வடிவில் வளைந்த 6.81 இன்ச் பேனலுடன் கூடிய Mi 11 அல்ட்ரா ‘சூப்பர்ஃபோன்’, டூயல் பிக்சல் புரோ தொழில்நுட்பத்துடன் கூடிய உலகின் முதல் ஸ்மார்ட்போன் கேமராவையும் கொண்டுள்ளது. இதனால் கிடைமட்டமாகவும், செங்குத்தாகவும், மிக விரைவான ஆட்டோஃபோகஸை செய்ய முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.


பின்புறத்தில் உள்ள புரோ-கிரேட் ட்ரிபிள் கேமரா அமைப்பு, 50MP GN2 தனிபயன் சென்சாரை கொண்டுள்ளது. இது சாம்சங்கின் ஐசோசெல் பிரிவுடன் சேர்ந்து தயாரிக்கப்பட்டுள்ளது. 48MP சோனி IMX586 அல்ட்ரா-வைட் சென்சார் மற்றும் 5 எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 48MP சோனி IMX586  பெரிஸ்கோப் லென்ஸ் ஆகியவை சிஸ்டத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றால் தெளிவான 10x ஹைப்ரிட் மற்றும் 120x டிஜிட்டல் ஜூம் சாத்தியமாகிறது.


ALSO READ: இந்த BSNL ரீசார்ச் திட்டத்தில் ரூ.10,000 மதிப்பிலான Google smart speaker கிடைக்கிறது, முந்துங்கள்!!


டிரிபிள் பிரைமரி கேமரா (Primary Camera) அமைப்பு அனைத்து லென்ஸ்கள் மூலமாகவும் 8K-வில் படம் பிடிக்க உதவுகிறது. மேலும் நைட் மோடில் படம் பிடிக்கவும் இது வசதியை அளிக்கிறது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்மார்ட்போன் நான்கு வெவ்வேறு ரெஃப்ரெஷ் விகிதங்களை சப்போர்ட் செய்கிறது. அவை 30Hz, 60Hz, 90Hz மற்றும் 120Hz.


ஸ்மார்ட்போன் டால்பி விஷன் மற்றும் எச்டிஆர் 10 + தொழில்நுட்பத்தையும் ஆதரிக்கிறது. மேலும் இது கார்னிங் கொரில்லா கிளாஸ் ‘விக்டஸ்’ மூலம் பாதுகாக்கப்படுகிறது. இது இதுவரை உள்ள ஸ்மார்ட்போன் பாதுகாப்புகளில் மிகவும் மேம்பட்ட பாதுகாப்பாகும். புதிய கூலிங் சிஸ்டம் மற்றும் புதிய கேம் டர்போ 4.0 அம்சம் காரணமாக Mi 11 அல்ட்ராவால் நீண்ட காலத்திற்கு அதிக சக்திடயுடன் இயங்க முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.


Mi 11 அல்ட்ரா 5,000mAh பேட்டரியுடன் வருகிறது. சூப்பர்ஃபாஸ்ட் 67W தொழில்நுட்பத்துடன் 36 நிமிடங்களில் இந்த ஃபோன் முழுமையாக சார்ஜ் ஆகி விடும். இந்த ஸ்மார்ட்ஃபோன்  IP68 தூசி மற்றும் நீர் எதிர்ப்பு மதிப்பீட்டுடன் கிடைக்கிறது.


ALSO READ: 5G இணைப்பை துரிதப்படுத்த அதிரடி நடவடிக்கைகளை எடுக்கும் மோடி அரசாங்கம்: முழு விவரம் உள்ளே


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR