Yamaha தனது சக்திவாய்ந்த பைக் FZ X ஐ அறிமுகப்படுத்தப் போகிறது!
யமஹா (Yamaha) ஒரு பெரிய ஜப்பானிய வாகன உற்பத்தியாளர், அதன் புதிய சக்திவாய்ந்த யமஹாFZ X இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.
புது டெல்லி: யமஹா (Yamaha) ஒரு பெரிய ஜப்பானிய வாகன உற்பத்தியாளர், அதன் புதிய சக்திவாய்ந்த யமஹா FZ X இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. சமீபத்தில், டிவி கமர்ஷியல் படப்பிடிப்பின் போது இந்த புதிய பைக் காணப்பட்டது. 150CC பிரிவில், இந்த பைக் சந்தையில் தனது சக்தியைக் காட்ட முழுமையாக தயாராக உள்ளது.
யமஹாவின் (Yamaha) எஃப்இசட் எஸ் வெர்ஷன் 3.0 பைக்கில் ஒற்றை சிலிண்டர், ஏர்-கூல்ட், 2-வால்வு, மூலம் பவர் 9.1 கிலோவாட் அல்லது 12.4 பிஎஸ் பவர் மற்றும் 13.6 என்எம் டார்க் வெளிப்படுத்தும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் பெற்றிருக்கும். FZ V3 மாடலை விட வித்தியாசப்படும் வகையில் வட்ட வடிவ எல்இடி ஹெட்லைட் பெற்றுள்ள இந்த மாடலின் பெட்ரோல் டேங் அமைப்பில் சிறிய மாறுதல்களுடன் கூடுதலான எக்ஸ்டென்ஷன் கொடுக்கப்பட்டு வித்தியாசமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ALSO READ | Yamaha YZF-R15 பைக், புதிய நிறத்தில் அறிமுகம்!
ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதியை தவிர கூடுதலாக சைடு ஸ்டாண்டு உள்ள சமயங்களில் இன்ஜின் கட் ஆஃப் ஆப்ஷனும் இணைக்கப்பட்டுள்ளது. கனெக்ட்டிவிட்டி சார்ந்த வசதிகளை பெறுவதற்கு ஆண்டராய்டு கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கிடைக்கின்ற Yamaha Motorcycle Connect X பெற்றிருக்கும்.
யமஹா FZ-X 150 பைக்கின் விலை ரூ.1.15 லட்சம் விலைக்குகள் துவங்குவதுவதுடன் விற்பனைக்கு ஜூன் முதல் வாரத்தில் எதிர்பார்க்கலாம்.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR