iPhone 15... ரூ. 25,000 விலையில் வாங்க சூப்பர் சான்ஸ்.. மிஸ் பண்ணாதீங்க
ஆப்பிளின் ஐபோனை வாங்குவது பலரின் கனவாக இருக்கலாம். அத்தகையவர்களுக்கு பிரீமியம் ஸ்மார்ட்போனான ஐபோன் 15 ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் வாங்க அருமையான வாய்ப்பு உள்ளது.
இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் ஃபோன்கள் என்பது அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது. இந்நிலையில், பட்ஜெட் போன் வாங்குபவர்களின் எண்ணிக்கை ஒரு பக்கம் அதிகமாக இருந்தாலும், இஎம்ஐ கடன் வசதி கிடைப்பதால், எளிய மற்றும் நடுத்தர மக்களும், பிரீமியம் போன்கள் பக்கமாக தங்கள் பார்வையை திருப்பி வருகின்றனர். அந்த வகையில் ஐபோன் என்பது பலர் வாங்க நினைக்கும் பிரீமியம் ஃபோன்களில் ஒன்று.
ஆப்பிளின் ஐபோனை வாங்குவது பலரின் கனவாக இருக்கலாம். அத்தகையவர்களுக்கு பிரீமியம் ஸ்மார்ட்போனான ஐபோன் 15 ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் வாங்க அருமையான வாய்ப்பு உள்ளது. தற்போது, இந்த ஸ்மார்ட்போன் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட்டில் மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது. ரூ.25 ஆயிரத்திற்கும் குறைவாக வாங்கலாம். iPhone 15 இல் கிடைக்கும் சலுகையை முழுமையாக அறிந்து கொள்ளலாம்..
iPhone 15 தள்ளுபடி விபரம்
ஐபோன் 15 (கருப்பு, 128 ஜிபி) ரூ.69,900 என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இந்த ஃபோன் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட்டில் 14% தள்ளுபடி கிடைக்கிறது. இதன் மூலம் எந்தச் சலுகையையும் பெற் அமுடியாவிட்டால் கூட, ரூ. 59,999 என்ற விலையில் வாங்கலாம். இது தவிர, இந்த போனில் நல்ல எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்கள் மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட்களும் கிடைக்கின்றன. இதன் காரணமாக போனின் விலை மேலும் குறைகிறது.
iPhone 15 சலுகை விபரம்
Flipkart தளத்தில் iPhone 15 இன் விலை ரூ.59,999. ஆனால், உங்கள் பழைய ஐபோன் 14 போனை எக்ஸ்சேஞ்ச் செய்தால் ரூ.35,500 தள்ளுபடி பெறலாம். இந்த வகையில் போனின் விலை ரூ.24,499 என்ற அளவில் குறைந்து விடும். இருப்பினும், பரிமாற்ற மதிப்பு உங்கள் தொலைபேசியின் நிலையைப் பொறுத்தது. தொலைபேசியின் விவரங்களை உள்ளிட்டு மதிப்பைச் சரிபார்க்க வேண்டும். இதனுடன், எச்டிஎஃப்சி வங்கி கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக ரூ.1,000 தள்ளுபடியும் கிடைக்கும். இதன் மூலம் இந்த போனை வெறும் ரூ.23,499க்கு வாங்கலாம்.
ஐபோன் 15 போனின் சிறப்பு அம்சங்கள்
ஐபோன் 15 ஆனது டைனமிக் ஐலேண்ட் தொழில்நுட்பத்துடன் வருகிறது. இது உங்களுக்கு அற்புத அனுபவத்தை தருகிறது. இது 6.1 அங்குல திரையைக் கொண்டுள்ளது. இது 2000 நிட்கள் வரை பிரகாசத்தை அளிக்கிறது. இதன் காரணமாக நீங்கள் மிகவும் தெளிவான படங்களைக் காண்பீர்கள். ஃபோனின் முக்கிய சிறப்பு அம்சம் அதன் 48MP முதன்மை கேமரா ஆகும். இது குவாட்-பிக்சல் சென்சார் மற்றும் 100% ஃபோகஸ் பிக்சல்களைக் கொண்டுள்ளது, இதன் காரணமாக புகைப்படங்கள் தரம் மிகச் சிறப்பாக இருக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கு கொடுக்கபட்ட அனைத்து விவரங்களும் முற்றிலும் தகவல் சார்ந்தது. Zee Tamil News நெட்வொர்க் மற்றும் அதன் எழுத்தாளர்கள் சலுகைகள், தள்ளுபடிகள் அல்லது தயாரிப்புகளை உறுதிப்படுத்தவோ அங்கீகரிக்கவோ இல்லை. சலுகைகளை பெற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்க வேண்டும். ஜீ நிறுவனம் அல்லது அதன் எழுத்தாளர்கள் நிதி அல்லது பொருள் இழப்புகளுக்கு பொறுப்பேற்க மாட்டார்கள்)
மேலும் படிக்க | ஜியோவின் புத்தாண்டு பரிசு.. ரூ.2025 ரீசார்ஜில்... ரூ.2150-க்கான கூடுதல் பலன்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ