இப்போதெல்லாம் பணப்பரிமாற்றங்கள் அனைத்து செயல்களும் இணையம் மூலமாகவே நடக்கிறது. இண்டர்நெட் மட்டும் இருந்தால், ஸ்மாட்ர்போன் வழியாகவே அனைத்து வங்கிப் பணப்பரிவர்த்தனைகளையும் செய்து முடித்துவிடலாம். கூகுள் பே, பேடிஎம், போன் பே ஆகிய செயலிகள் பணப்பரிவர்த்தனையை மிக எளிமையாக்கிவிட்டன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காய்கறி கடைகள் முதல் ஹோட்டல்கள் வரை நீங்கள் கையில் பணம் எடுக்காமல் சென்றாலும், யுபிஐ டிரான்ஸ்பர் மூலம் பணப்பரிவர்த்தனையை மேற்கொண்டு பில்களை செலுத்திவிட முடியும். அதேநேரத்தில் உங்களிடம் இண்டர்நெட் கனெக்ஷன் இல்லையென்றால், ஸ்மார்ட்போன்களில் இருந்து பணப்பரிவர்த்தனையை செய்ய முடியாது. இப்படி தான் பலரும் நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால், உங்கள் மொபைலில் இண்டர்நெட் இல்லையென்றாலும் பணப்பரிவர்த்தனையை செய்ய முடியும். 


மேலும் படிக்க | WhatsApp Payments: திடீரென அதிகரிக்கும் வாட்ஸ்அப் பேமெண்ட் பரிவர்த்தனைகள்


Paytm, PhonePay மற்றும் Google Pay போன்ற UPI செயலிகள் மூலம் இணையம் இல்லாமல் எப்படி பணம் செலுத்த முடியும்? என்று நீங்கள் யோசிக்கலாம். அதற்கு எளிமையான வழிமுறைகளைப் பின்பற்றினால்போதும். அதாவது மொபைல் டேட்டா அல்லது இணையம் இல்லாமல் இருக்கும்போது நீங்கள் USSD சேவையைப் பயன்படுத்த வேண்டும். 


இதற்கு முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் '* 99 #' என்பதை டயல் செய்ய வேண்டும். நீங்கள் ஒரு பாப்-அப் மெனுவைக் காண்பீர்கள். அதில் உங்களுக்கு வழங்கப்பட்ட பல விருப்பங்களில் 'பணம் அனுப்பு' விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இப்போது, ​​UPI ஐடி, வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் மொபைல் எண்ணுடன் பணத்தை அனுப்புவதற்கான விருப்பத்தைப் பார்ப்பீர்கள்.


மேலும் படிக்க | Waterproof Smartphones: டாப் 5 வாட்டர்ப்ரூப் ஸ்மார்ட்போன்கள்


இங்கிருந்து கட்டண முறையைத் தேர்ந்தெடுத்து, தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்த பிறகு, நீங்கள் எவ்வளவு செலுத்த விரும்புகிறீர்கள் என்பதை உள்ளிடவும். அதன் பிறகு, நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் UPI பின்னை உள்ளிட்டு பணத்தை மாற்ற வேண்டும். இந்த வழியில், உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து இணையம் இல்லாமல் UPI மூலம் பணம் செலுத்த முடியும்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR