உலகளவில் முடங்கி போன YouTube இணையதளம் மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 




கூகுளின் பிரபல சமூக வலைதளமான YouTube தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியது. பல விஷயங்களை தெரிந்து கொள்ள வழி செய்யும் சேவை தான் YouTube. உலகம் முழுக்க YouTube பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 


இந்நிலையில், இன்று காலை முதல் உலகளவில் YouTube இணைய தளம் சர்வர் கோளாறால் முடங்கியது. பழுதை சரி செய்யும் பணியில் உயர்நுட்ப வல்லுனர் குழு ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு பிறகு அந்த இணைய தளம் மீண்டும் செயல்பட துவங்கி உள்ளது.