இந்தியாவில் `Youtube Go`-னை வெளியிட்டது Youtube!
இதன் மூலம், 2ஜி நெட்வொர்க் சேவையிலும் வீடியோவைப் பார்க்கவும், டவுன்லோடு செய்யவும் முடியும் என்கிறது யூடியூப்.
கூகிளின் வீடியோ தளமான, யூடியூப் இந்தியப் பயனாளர்களுக்காக "Youtube Go" என்ற பெயரில் பீட்டா வெர்சனை வெளியிட்டுள்ளது!
குறைவான இன்டர்நெட் வேகம் உள்ள இடங்களில் இணைய வீடியோகளை பார்ப்பதும், டவுன்லோடு செய்வதும் நடக்காத ஒரு விஷயம்.
இதைக் மனதில் கொண்டு யூடியூப் தற்போது இந்த பீட்டா வெர்சனை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
இதன் மூலம், 2ஜி நெட்வொர்க் சேவையிலும் வீடியோவைப் பார்க்கவும், டவுன்லோடு செய்யவும் முடியும் என்கிறது யூடியூப்.
முதல் முறையாக இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தும் போது பயனரின் மொபைல் எண் மற்றும் கூகுள் அக்கவுன்ட் போன்ற விவரங்களை அளித்த பின்னரே உள்நுழைய முடியும்.
இந்ந அப்ளிகேஷன் ஆனது தற்போது கூகிள்ப்ளே-வினில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.