சர்ச்சை கருத்தால் சிக்கிய திரிபுரா முதல்வருக்கு மோடி அழைப்பு!!
சர்ச்சைக்குரிய கருத்துகளை தொடர்ந்து வெளியிட்டு வரும் திரிபுரா முதல்வரை டெல்லிக்கு வருமாறு பாஜக தலைமை அழைப்பு விடுத்துள்ளது!
மகாபாரத காலத்திலேயே இணையதள வசதி இருந்தது என்று கூறிய நாள் முதல் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை திரிபுரா முதல்வர் பிப்லாப் தேப் குமார் பதிவிட்டு வந்தார்.
படித்த இளைஞர்கள், அரசு வேலை கேட்டு அரசியல்வாதிகளின் பின்னால் செல்லாமல் பீடா கடை வைக்கலாம் என்றார்.
அதையடுத்து, இந்தியாவைச் சேர்ந்த டயானா ஹைடனுக்கு உலக அழகிப் பட்டம் 1997-ல் எதன் அடிப்படையில் வழங்கப்பட்டது. என்ற கேள்வி கேட்டு அனைவரையும் அதிர்ச்சிகுள்ளாக்கினார்.
இந்நிலையில், இந்த சர்ச்சை தொடர்பாக விசாரணை மேற்கொள்ள, மே மாதம் 2-ஆம் தேதி டெல்லி வந்து மோடியையும், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவையும் சந்திக்கும்படி திரிபுரா முதல்வருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.