நெடுஞ்சாலைகளை, உள்ளாட்சி சாலைகளாக மாற்றம் செய்யாத பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதிக்க முடியாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் 500 மீட்டர் தூரத்திற்குள் உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டது. இதனையடுத்து தமிழகத்தில் சுமார் 3000-ம் மேற்பட்ட டாஸ்மாக் டைகள் மூடப்பட்டன.


இதுகுறித்து விளக்கம் கேட்டு சண்டிகர் மாநிலம் தொடர்ந்த வழக்கில்,


மாநில நெடுஞ்சாலைகளை நகராட்சி சாலைகளாக மாற்றி முறையாக அறிவிப்பு வெளியிட்டபின் மதுபான கடைகளை திறக்கலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.


இதனையடுத்து தமிழக அரசு எந்தவித அறிவிப்புமின்றி மூடப்பட்ட கடைகளில் 1700 மதுபான கடைகளை மீண்டும் திறக்க அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு தடை கோரி வழக்குரைஞர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில்,


தமிழக அரசு தேசிய மற்றும் மாநில நெடுங்சாலைகள் உள்ளாட்சி அமைப்புகளின் சாலைகளாக மாற்றாமல் திறந்த டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என உத்தரவிட்டது. உள்ளாட்சி சாலைகளாக மாற்றி அறிவிப்பு வெளியிட்ட பின் டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி வழங்கலாம் என தெரி