தமிழக சட்டசபை கூட்டம்: 67 ஆயுள் கைதிகள் விடுதலை!
எம்ஜிஆர் நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி 10 ஆண்டுகள் தண்டனைக் காலத்தை நிறைவு செய்த ஆயுள் கைதிகள் 67 பேர் விடுதலை செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
எம்ஜிஆர் நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி 10 ஆண்டுகள் தண்டனைக் காலத்தை நிறைவு செய்த ஆயுள் கைதிகள் 67 பேர் விடுதலை செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 25.02.18 அன்று 10 ஆண்டுகள் தண்டனை நிறைவு பெற்றவர்களில் முதல்கட்டமாக 67 பேர் விடுதலை செய்யப்படுகின்றனர். கவர்னருக்கு உள்ள அதிகாரத்தின்படி, சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் வழிகாட்டுதலின்படி இவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர் என்றது.
முன்னதாக, கடந்த மாதம் 29ம் தேதி கூடிய சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வரை திமுக சட்டசபையில் பங்கேற்காது என்று அறிவித்தார். தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் உடனே பதவி விலக வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும் வரை நாங்கள் அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்போம் என்று சட்டப் பேரவையில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
இந்நிலையில், தோழைமைக்கட்சி தலைவர்கள் கோரிக்கைகயை ஏற்று பேரவை நிகழ்ச்சியில் திமுக இன்று பங்கேற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.