நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவ வேண்டும் -ஸ்டாலின்!
நீட் தேர்வு எழுத வெளிமாநிலம் செல்லும் தமிழக மாணவர்களுக்கு உரிய உதவிகளை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை..!
நீட் தேர்வு எழுத வெளிமாநிலம் செல்லும் தமிழக மாணவர்களுக்கு உரிய உதவிகளை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை..!
கோவையில், குட்கா ஆலை விவகாரத்தில் திமுக-வினர் கைது செய்யப்பட்டதை கண்டித்து, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பார்ட்டத்தை தொடர்ந்கினர்!
கோவை மாவட்டம் சூலூர் பகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் குடோனில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, உற்பத்தி செய்யும் தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது அங்கிருந்த குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. குட்கா தொழிற்சாலையில் போலீசார் சோதனை நடத்திய போது, ஆதாரங்களை அழிக்க முயற்சி செய்வதாகக் கூறி, தி.மு.க-வினர் போராட்டம் நடத்தினர். அப்போது இந்த விவகாரத்தில் திமுகவினருக்கும் தொடர்பு இருப்பதாக கூறி 10 பேர் மீது 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், குட்கா ஆலை விவகாரத்தில் திமுக-வினர் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு திமுக-வினர் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர். திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டமானது காலை 10.30 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க ஸ்டாலின் விமானம் மூலம் கோவை வந்தடைந்தார்.
போராட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின்...!
புற்றுநோய்க்கு காரணமாக போதைப்பொருள் குட்கா தமிழகத்தில் வெளிப்படையாக விற்கப்படுகிறது. வாக்குகளை கண்டு அஞ்சும் இயக்கம் திமுக அல்ல. காவல் துறையினரின் கைது நடவடிக்கையை கண்டு அஞ்சி பின்வாங்க மாட்டோம் என தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து அவர், நீட் தேர்வு குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளது...!
நீட் தேர்வு எழுத வெளிமாநிலம் செல்லும் தமிழக மாணவர்களுக்கு உரிய உதவிகளை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்..!